நாமெல்லாம்
உறவினர்கள்
ஒன்றுபட்ட
குலத்தவர்கள் நாமெல்லாம் வாழ்கின்றோம் உயர்ந்த வாழ்க்கை
தொன்று தொட்டு நம்முறவு தொடர்புகொண்டு சிறந்ததுண்டு தூயோய் தங்கள்
நன்றுபட்ட தம்பியவர் அப்துல்லா பிள்ளையினால்
நட்பில் கீறல்
இன்றுவந்து விட்டதனை இன்றன்று பன்னாளாய் இயம்பி
உள்ளோம். 22
இன்னும்
மாறவே இல்லை
இதுவரையில்
மாற்றமில்லை இனிமேலும் பொறுப்பதில்லை எனவே எண்ணி
இதயமுறத் தெரிவிக்க இவண்வந்தோம் இனிவாரோம் என்று கூறி
முதுமகனார் அபூத்தாலிப்பு இதயமது கலக்கமுற மொழிந்து பின்னர்ப்
புதுமைஎனும் காரணத்தால் பொய்ப்பழமை தனைஉயர்த்திப் பேசிப் போனார். 23
அபூத்தாலிப்பு
கலங்கினார்
கலங்கியவர்
அபூத்தாலிப்பு அருமைந்தர் முகம்மதுவைக் கனிவாய்
நோக்கி
நிலங்கிளறும் பகைவிலக்கி நெடிய நந்தம் மரபுளோர்முன் நெருங்கி வாழ்ந்தால்
குலங்கனியும் எனக்கூறும் பெருந்தந்தை வேண்டுதலைக் கொள்கைக் கோமான்
நலம்கனிய வேண்டுமெனும் விருப்பத்தால் மறுத்துரைத்து நவின்றார் பின்பே; 24
தந்தையே
நான் மாற மாட்டேன்
அடங்காநல் அன்புடைய உளத்தாரே என்னுடைய அருமைத்தந்தாய்!
தடங்கண்ணார் சூரியனும் தண்ணிலவும் எனக்கெனவே தந்திட்டாலும்
உடன்பாடாய் ஊரெல்லாம் திரண்டுவந்து பகைத்தென்னை ஒழித்திட்டாலும்
இடம்தந்த இறையவனின் பெருமையினைச் சொல்லாமல் இருக்க
மாட்டேன். 25
சரி மகனே!
உன் வழியே செல்
இம்மொழியை
எழில்மகனார் உரைத்திடவே உளங்கொண்ட இனியதந்தை
செம்மொழியாய்! இனிஎன்றும் உன்கொள்கை மறுக்கமாட்டேன்
சிறக்கச் சொல்வாய்
எம்மொழியும் என்பதனை நன்கறிவேன் எனக்கூற ஏந்தலாரும்
அம்மொழியும் இறையவனின் அருள்மொழியாய் உளத்தெண்ணி அதையே
செய்தார். 26
கொல்வதைத்தவிர
வேறு வழியில்லை
செய்வதையே
செய்துகொண்டு சொல்லுவதைக்கேளாமல் திரிகின்றானை
உய்வகையில் விடுப்பதனால் உணர்வுடையோர்
நமக்கெல்லாம் உயர்வே இல்லை
பொய்வகையார் இவ்வாறு புகன்றவராய் வலீதென்பான்
புதல்வன் ஆன
மெய்வனப்பின் அம்மாறா தனக்கீடாய் முகம்மதுவை
மேவிக்கொல்வோம். 27
|