|
வலீது தன்கருத்தைக்
கூறினான்
கள்ளஉரை
கேட்டவனாம் வலீதென்பான் இடைமறித்துக் கருத்துச் சொன்னான்
உள்ளமெலாம் வஞ்சத்தான் உறுகணியன் பித்தனெனும் உரைகள் எல்லாம்
விள்ளுவது பொருத்தமிலை பகைவளர்க்கும் குடிகேடன் வீணன் என்று
சொல்லுவதே முறையென்றான் பொய்மனமே கொண்டவனாய்ச்
சூழ்ச்சி செய்தே; 34
முகம்மது
கொடியவன் - வஞ்சகன் என்றனர்
விழாக்காண வந்தவரை “விழிப்படைக” எனக்கூறி விளக்கமாக
அழாக்குறையாய் “ஹஜ்” பயண மாந்தர்களே! உம்மைஎலாம் அணுகிவந்து
தொழாமலே தடுப்பதற்குத் தோன்றுவன எலாம் சொல்லத் தூய்மை இல்லான்
குழாம் ஒன்றும் வைத்துள்ளான் குணம் கொடியான்
கூடாதகொள்கை கொண்டான். 35
வழி தவறிச்
செல்லவே உரைப்பான்
மந்திரத்தைப்
போல்பேசி மயக்கிடுவான்; மனம் கெட்ட மமதையாலே
தந்திரங்கள் செய்துதகா நெறிதன்னில் செலுத்திடுவான்
தாறுமாறாய்
முந்திஉரை மொழிந்திடுவான் முகம்மதெனும் பேருடையான் மொழிவதெல்லாம்
வந்த உமை வழிதவறச் செய்வதற்கே” என்றார்கள் வாய்மை
இல்லார். 36
அவனை அடையாளம் கண்டு
ஒதுக்கிடுக
“நீர்வணங்கும் கடவுளெலாம் கடவுளிலை எனக்கூறி நெருங்கிக் கண்முன்
ஓர்உருவும் இல்லாத ஒருவனென்றும் - தொழும்முறையும் உள்ளதென்றும்
பேர் அல்லா -அவன் தூதன் தானென்றும் பொய்பேசிப் பெருமை கொள்வான்
ஊர் அவனை இனம்கண்டே ஒதுக்கியது போல்நீரும் ஒதுக்கு”
கென்றார். 37
செபுறயீல் வலீது நரகு அடைவான்
என்றார்
வல்லாரைப் புல்லியராய் வந்தவர்பால் கருத்துரைத்த வலீதென்பானோ
நல்லாற்றல் இல்லாத நோய் மனத்தான் உறுபொருளின் நலமும் கொள்ளான்
பல்லாற்றால் பழகியவர் உதவிஇன்றிப் தீயுழிக்குள் விழுவான் என்றே
சொல்லாற்றல் திருக்குர்ஆன் சொல்லியதைச் செபுறயீல்
சொல்லிச்சென்றார். 38
மக்கா மக்கள்
ஒற்றுமையுடன் வாழ்க
மக்காவின்
நகர்க்குள்ளே வந்தமக்கள் இதைக்கேட்டு மதினா
சென்றார்
தக்காராம் அரபியர்க்குத் தக்க செயல் இதுவன்று
தாயத்தார் போல்
ஒக்கஅவர் வாழ்வதற்கே உரியவர்கள் என அபூகை(சு) உயர்வுடையார்
சிக்கலற ஒருமடலின் வழிமக்கா மக்களுக்கே தெரிவித்தாரே! 39
|