பக்கம் எண் :

146துரை-மாலிறையன்

என்னைக் கொன்றால்தான் அவரைக் கொல்ல முடியும்

“ஒன்று சொல்வேன் நான் ஐய! உருவி உம் வாளால் என்ைகை்
கொன்று போட்டிடுவீர் என்றால் கோதிலா நபியார் தம்மை
இன்றுமால் கொல்லக் கூடும்” என்றந்த மாடு கூற
நன்றுஎன உமறு கூறி நல்லமாட்டினை எதிர்த்தார். 23

உமறு காளையை எதிர்த்தல்

வாளினை வீசி மாட்டின் வாலினை அறுக்க வந்தார்
தாளினை உதைத்துத் தாவித் தாக்குதல் தவிர்த்ததங்கே
நீளவே வாளை நீட்டி நெடுந்தலை தனையே தாக்கக்
காளையோ பக்கம் தாவக் கத்தி ஏமாந்ததாங்கே! 24

உமறுவால் ஒன்றுமே செய்ய இயலவில்லை

புயலெனச் சீறி வானில் பொலிந்தது மாடு; வெய்யில்
கயலென மின்னிற் றக்கால் கையினில் உமறு வாளே;
அயல்வரும் மாட்டின் மீதில் அவர்விழி பட்ட போதும்
செயல்படும் படையால் தீமை சிறிதும் ஏற்படவில்லையே! 25

மாடு பேசியது உமறு பிதற்றினார்

கூசியது உமறு கண்கள் கொம்புகள் கூர்மை யாலே;
வீசிய வாலின் காற்றால் விளைந்தது புழுதிக் கூட்டம்;
நாசியின் வெப்ப மூச்சால் நடுங்கின மலையின் ஈட்டம்;
பேசிய மாட்டின் முன்னே பிதற்றினார் உமறுதாமே; 26

காளை வீர விளையாட்டு

சுற்றிவந் ததுவான் தன்னைச் சுடர்ந்து நின்றதுவே மாடு;
பற்றிவந் ததுவிண் மீனைப் படிந்துவந்ததுவே மண்ணில்;
பெற்றுவந்தது விண்வீரம் பேர்த்துவந்ததுவே எல்லாம்
முற்றவந்தவரின் முன்னே முட்டி நின்றதுவே மாடு. 27

நாள் முழுதும் முயன்றும் முடியவில்லை

காலைநாள் முதலாய் மாலை கால்வலித்திடவே ஆடி
வேலைகற்றவராம் வீரர் வெல்லவே இயலாதானார்;
பாலையில் அகப்பட்டார் போல் பதறினார் உமறு வாடி;
காலையை விட அம்மாலை காளையோ பொலியக் கண்டார். 28