உடும்பு பேசியது
வாடியபுல் ஈரம்பட் டொளிர்தல் போல
வள்ளலவர் திருமொழியைக் கேட்ட போதே
நீடியபுத் துணர்ச்சியுடன், “உலகம் உய்ய
நேர்வந்த நாயகரே! நபியே!” என்று
பாடியது போலத்தன் பிளந்த நாவால்
“பண்புடையீர்! ஊர்ந்து செலும் வாழ்க்கை யேனை
நாடிவரப் செய்ததுமேன் நவில்க” என்றே
நயமுடனே அவ்வுடும்பும் கேட்ட தாலோ; 10
வணங்குவார் அமைதி காண்பார்
“நீ வணங்கும் பெரியோன் யார்?” என்று கேட்ட
நீதிமகனார் முன்னே உடும்பு பேசும்:
“பார் வணங்கும் மேலோரே! யான்வணங்கும்
பரம்பொருளை வான்வணங்கும்; அன்னவாறே
நீர்வணங்கும் வையமெலாம் நேர்வணங்கும்;
நேர்காண முடியாத நேயன் முன்னே
ஆர்வணங்கி வந்தாலும் அமைதி காண்பர்
அறியாதோர் அழிநெறியே நாடிச் செல்வர்” 11
உடும்பே என்சிறப்பைக் கூறு
இவ்வாறுஅவ் உடும்பதுதான் கூறக் கேட்டே
இனியவரும், “உடும்பே! நீ விண்ணிறைவன்
செவ்வாற்றல் சீர் எல்லாம் அறிந்து சொன்ன
சிறப்பதனால் என்னையும்நீ அறிந்திருக்கும்
அவ்வாற்றல் கொண்டிருப்பாய்; அதனால் என்றன்
அருமையினை உன் நாவால் உரைக்க” என்றார்
அவ்வாறே அவ்வுடும்பும் ஐயன்சீரை
அணுவளவும் குறையாமல் உரைத்த தாங்கே! 12
நீரே புகழுக்கு உரியவர்
“இதுவரையில் புவிவந்த நபிகட் கெல்லாம்
இலங்குபுகழ்க் குரியநபி நீரே; வையப்
பொதுமறையின் நாயக! உம் ஒளியால் அன்றோ
புவிமண்விண் மற்றுமெலாம் தோன்றக் கண்டோம்
|