பக்கம் எண் :

160துரை-மாலிறையன்

உத்துபா முகம்மதுமுன் சென்றான்

எழிலுரை பேசி இனியரை மடக்க

எண்ணிய உத்துபா தேனீ

தொழிலது புரியத் துணைபலர் சூழத்

தோன்றலார் முகம்மது நபியின்

பொழில்வளம் சூழ்ந்த புதுமனை உள்ளே

புகுந்தது புகழ்கெடுத் திடவே

பிழிநற வதனைப் பேச்சென உரைக்கும்

பெருநபியார் வரவேற்றார். 20

கனிஎன்று காயைத் தடுக்கின்றீரே!

ஆயிடம் வந்த அகவலி உதுபா

அருள்மறை வேந்தரின் முன்போய்

“ஆயநம் முறைகள் அரியன வாகும்

அணியவன் இறைவனைக் காட்டும்

காயவை என்றே கனிதருவது போல்

கவினிலாப் புதுமுறை புகுத்திக்

தூயவன் ஒருவன் அவன்திருத் தூதாய்த்

தோன்றினீர்” எனஉரைக் கின்றீர். 21

மக்கள் உள்ளங்களை மயக்குகின்றீரே!

தெளிவுரை என்பீர்; திருக்குர்ஆன்என்பீர்;

திகழ்கலி மாவென உரைப்பீர்!

உளுமுறை என்பீர்; ஒருதிசை நோக்கி

ஒருசில மொழிகளை உரைப்பீர்;

உளதரை மீதில் தலையினைச் சாய்த்தே

உணர்வொடும் வணங்கியே எழுவீர்;

ஒளிஇறை இதுவோ? ஒரு நலம் உளதோ?

உளங்களை மயக்குகின் றீரே! 22