|
உறவினரோடு
ஒத்துப் போங்கள்
உற்றவ ரோடும்
உறவின ரோடும்
ஒத்துநீர்
வாழ்ந்திடு வீரேல்
மற்றவர்
காணா மணிப்பெருஞ் செல்வ
மாண்பொடு
மதிப்பையும் தருவோம்
நற்றவ வாழ்வு நனிஉள
தேனும்
நாடிட மறுத்திடு
கின்றீர்
குற்றமே புரியும்
பற்றுடன் வந்தீர்
கொண்டநற்
கொள்கையும் அற்றீர்; 23
மந்திரம்
செய்து மயக்குகிறீர்1
புதுமைகள்
பலவாய்ப் பொலிவுறச் செய்வீர்
பொய்யினை
மெய்யெனக் காட்டிப்
பொதுவினர்
நம்பும் படிபுரிந் திடுவீர்
புரிந்திடும்
புதுமைகள் ஆன
பதுமையும் விலங்கும் பேசுதல்
எல்லாம்
பரமனின் அருட்செயல்
இல்லை
இதுபல மாய மந்திர
வலியால்
இயற்றிடல் ஆகுமே”
என்றான். 24
உத்துபா
என்னும் புழு மலையைக் குடையப் போனது
புழுவென நெளியும் புல்லவன்
வல்ல
“பொன்மலை அருகினில்
சென்று
முழுவலி
காட்டிச் சாய்த்தழித் திடுவேன்
முன்ன
வரேஇதைப் பாரும்
தொழுகையும்
கூறும் சொல்கலி மாவும்
துளியள வாகிலும்
ஈங்கே
எழுவகை இல்லா இயல்பினில்
அழிப்பேன்
என உரைத் தான்உத்து பாவே!” 25
|