பக்கம் எண் :

162துரை-மாலிறையன்

இப்போது நான் பேசுகிறேன்

இதுவரை நீரே இயம்பினீர் கேட்டேன்

இனிஒரு மொழிஇவண் புகல்வேன்

முதுமறை நெறியே முழுவதும் ஏற்றீர்

முகிழ்புது முறையினை மறுத்தீர்

எதுமுறை அளிக்கும் என்பதைப் புகல்வேன்

இனியரே செவிகொளும்” என்றார்

புதுமுறை அளிக்கும் புகழ்முக நபியார்

புலம்பிய உத்துபா விடமே! 26

குறை கண்டால் கூறுக

“மறைத்திருக் குர்ஆன் மணிஉரை யாவும்

மதிப்பிலை” எனஉரை செய்தீர்

முறையொடும் நீவிர் மும்மறை கற்றீர்

முன்னதின் பின்னதில் உள்ள

குறையது கண்டால் கூறுக பின்னர்க்

குறையிலா எழில்திருக் குர்ஆன்

நிறையது சொல்வேன்” என உரை செய்தார்

நேரிய முகம்மது கோமான். 27

அப்படி என்றால் புதுமறையைக் கூறுக

பழமுறை கொண்ட பண்புகள் யாவும்

படிப்பிலா மக்களும் அறிவார்;

விழுமிய தெனநீர் உரைசெயும் மறையின்

விளக்கமும் சிறப்புமே அறியார்

முழுமதி என்னும் முகமது கொண்டீர்

மொழிகவே அருள்திருக் குர்ஆன்

செழுநலப் பொருளை எனக்குரைக் கென்றான்

கேடற நின்ற உத்துபாவே. 28