பக்கம் எண் :

164துரை-மாலிறையன்

மருந்து புகட்டும் தாய் போன்றவர் முகம்மது நபி

வாய்வீரம் பலபேசி வெல்லச் சென்று

வகையற்றுத் திரும்பிவந்த உத்து பாதன்

காய்ச்சொற்கள் கனியாத நிலையை எல்லாம்

கல்மனமும் கரைந்திடவே சொல்ல லானான்

நோய்போக்கும் மருந்தேபோல் அருமை யான

நுண்ணியவாம் கருத்துரைகள் புகலு கின்றார்

தாய்போன்ற அன்புடையார் தவறில் லாதார்

தருகின்ற நெறிவாய்மை நெறியே என்றும்; 32

உத்துபா அபூசகுல் கூட்டத்துக்கு அறிவுரை

வெல்லுதற்கு நினைப்பதெலாம் வீணே; நல்ல

விளைச்சலினை அழித்துவிட லாமோ? உண்மை

சொல்லுதற்கே வந்தவரின் சீரை அன்புச்

சுடரைநாம் நம்பிக்கை சிறிதும் இன்றிக்

கொல்லுதற்கே முயலுதலும் வேண்டா” என்றும்

கொள்கையதை மாற்றிஉரை செய்த உத்பா

வல்லவனை அபூசகுல்தன் கூட்டத் தோடு

வகையற்று வசைமொழியால் கடிய லானான். 33

பாவம் இந்த உத்துபா ஏமாந்து விட்டான்

“பொய்ந்நெறியை மெய்ந்நெறியாய்ப் புகலுகின்ற

போக்கிலியான் முகமதியன் தந்திரங்கள்

செய்வலியான் அவன்முன்னே வலிமை இல்லாச்

சிறுமகனாம் உத்துபாஎன் செய்தல்கூடும்?

உய்வகையை உரைப்பதுபோல் அழிக்க வந்தான்

உளறுகிற வற்றைநாம் ஒழிக்கா விட்டால்

கொய்திடுவான் நம்குலத்துப்பெருமை என்னும்

குலைக்கனியை” எனச்சொன்னான் அன்பில்லானே!” 34