பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்167


கபீபு மன்னற்கு மடல் எழுதினார்

ஒருநெறியை அபூசகுல் ஆங்(கு)உரைத்த போதில்

ஒட்டியுளார் செம்மறியின் மந்தை போலப்

பெரு நலமாய் ஒத்திசைத்தார் “ஆ! ஆ” என்றார்

பிழையற்ற செயலிதனை முடித்துமீண்டு

வருவதற்கும் ஓர் ஆளைத் தேர்ந்தெடுத்தார்;

மடல்தன்னை வரைவோனை வரவழைத்தார்;

திருமுகத்தில் முகம்மதுவின் நன்மை எல்லாம்

தீமைஎனவே காட்டி எழுதச் சொன்னார்; 41

நாங்கள் மக்கா மக்கள் “குபல்” தெய்வம்

வணங்குவோம்

பழமறையின் நலமனைத்தும் கற்று ணர்ந்த

பண்புடைய கபீபரசர் அறிதல் வேண்டும்;

விழைமக்க மாநகரின் மாந்தர் மற்றும்

வினைநலம்செய் அபூசகுல் ஆம் நாங்கள் கூடி

எழுகின்ற ஆர்வத்தால் வணக்கம் செய்திங்(கு)

எழுதுகிற விண்ணப்பம் என்ன வென்றால்

விழுமியசீர் குபல் என்னும் உருத்தெய்வத்தை

விருப்பமுடம் வணங்குகிறோம் மக்கா மக்கள்; 42

அப்துல்லா - ஆமினா பெற்றவன்

மக்காவில் ஆசிமெனும் குலத்தில் தோன்றி

மகம்மதெனும் பேருடையான் ஒருவன் உள்ளான்

தக்கவர்கள் அப்துல்லா ஆமி னாவே

தந்தைதாய் ஆனார்கள் என்ற போதும்

இக்காலம் அன்னவர்கள் உயிரோடில்லை

இருந்தாலும் எத்தீமை விரும்பு வாரோ?

மக்களை ஏமாற்றுகிற பொய்மை காட்டி

மயக்குகிறான் வஞ்சமிகு செயல்களாலே! 43

(எத்தீம்-அனாதை)