கதீசா செல்வத்தால் தருக்குற்றான்
குவைலிதுவின்
அரியமகள் கதீசா நங்கை
கொண்டவனை
இழந்துவிட்டுக் கைம்பெண் ஆனாள்;
குவைகுவையாய்ச்
செல்வநலம் கொண்டாள் என்று
கூறுகின்ற
காரணத்தால் மணந்து கொண்டான்
எவருக்கும்
மதிப்பில்லை இதயத் தாலே
எடுத்தெறிந்து பேசுகிறான் அகம்பா
வத்தான்
தவறுதனை
அறியாத தறுதலையான்
தருக்கோடு
எங்கள்முன் திரிகின்றானே! 44
மானமிலாச்
செய்கை உள்ளவன்
ஆனதுவோ
அகவைஓர் நாற்ப தேதான்
அரற்றுவதோ
அப்பப்பா பொறுக்க வில்லை!
“வானவனோ ஒருவன்தான்” என்று சொல்வான்
“வந்தவன்யான் அவன் தூதன்” என்றும் சொல்வான்;
“ஆனவெலாம் அவனால்தான்” என்றும்
கூறி
“அருளியதும் திருக்குர்ஆன்” அதுவே
என்பான்;
மானமிலான் புவிமண்ணில்
தலைகவிழ்ந்து
வணங்குவதாய்க் கூறுவதும் புதுமை
ஐயா! 45
எல்லாரும்
அவன்முன் ஏமாறுகின்றனர்
கலிமாவை
உரைப்போர்க்கே வீடு கிட்டும்
கருதாத மற்றவர்க்கோ நரகம்
என்பான்;
புலிமாவைப் போன்றவரும்
எலிபோன்றான் முன்
புனிதத்தை
இழந்தவனை நத்துகின்றார்;
பொலிமாண்பு
மிகுந்தநந்தம் தெய்வம் எல்லாம்
பொலியாத
கல்லென்றே பிதற்றுகின்றான்;
வலியானை
மதம்கொண்ட தன்மை கொண்ட
வகையானை
எண்ணி எண்ணிக் கலங்குகின்றோம். 46
|