உறவையும்
நட்பையும் மதிப்பதில்லை
“பெரியவர்கள்
செய்தெய்வ வணக்க மெல்லாம்
பெருமையிலை
என்கின்றான் மரபு மாறா(து)
அரியவர்கள்
செய்கின்ற சடங்கை எல்லாம்
அருவருப்பாய்க்
கூறுகின்றான்; மதிப்ப தற்கே
உரியவர்கள்
ஆம்சமயத் தலைவர் தம்மை
ஒதுக்கிவிடச் சொல்கின்றான்; தானே
எல்லாம்
தெரிந்தவன்போல் பேசுகின்றான்; உறவை
நட்பைத்
தீண்டாமல் விலக்குகிறான்; யாது
செய்வோம்? 47
“மன்னரையும் ஒழிப்பேன்”
என்கிறான்
மண்ணாளும் வேந்தரையும் மாய்க்க
வல்ல
மகம்மதுவே தான்என்று மார்பைத்
தட்டிக்
கண்ணாலும் முறைக்கின்றான்; கருணை
அற்ற
கருத்தாலும் உரைக்கின்றான்; எங்கோ
உள்ள
விண்ணாளும் ஒருவனைத்தான் மதிப்பேன்”
என்று
வீறார்ப்பும் காட்டுகிறான் மக்கள்
தம்மை
முள்நாணும் படியான சொற்க ளாலே
முறையற்றுக்
குத்துகிறான் கொடுமை ஐயா! 48
நாங்கள்
அஞ்சி அஞ்சி வாழ்கிறோம்
வெறுப்பான புன்மொழிகள்; தீமை
ஒன்றே
விளைவான
செயல்முறைகள் எதற்கெதற்கும்
மறுப்பான
நடைமுறைகள்; மதிப்பில்லாத
மதர்ப்பான
தடைவிடைகள் எதிர்த்துக் கேட்டால்
ஒறுப்பானோ
எனும்அச்சம் மிகவே கொண்டும்
ஒதுங்கித்தான் இருக்கின்றோம்; இவற்றுக்
கெல்லாம்
பொறுப்பானோர் தாங்களெனும்
எண்ணத்தாலே
புவியினுமோர் பொறுமையராய் வாழுகின்றோம். 49
|