படை கொண்டீர் பாதுகாக்க வருக
இடையூறு
களைஎல்லாம் மடலில் வைத்தோம்
இருக்கின்ற
கொடுமைகளோ இவற்றை மிஞ்சும்
படைநூறு கொண்டவர் நீர் பரிந்து
வந்தால்
பகை நூறி விடுவீர்கள் எனவே
நம்பிக்
கொடைஊறும்
நலம்கொண்ட கபீபு மன்னர்
கொண்டிதனை
உளம்கொண்டு காக்க” என்றே
முடை
நாறும் உளத்தார்கள் அண்ணல் மீது
முறையிட்டார்
கபீபென்னும் அரச ருக்கே! 50
மடல் எடுத்துப் போனான் ஒருவன்
கடக்குமெழில் மாமலைகள் காற்றில்
ஆடிக்
கனிஉதிர்க்கும் குலைஈந்தின் நிரைவ
கைகள்
முடக்குமரக் கிளைகளொடும் பாலை ஓமை
மொட்டைமர வற்றல்கள் இவற்றை
எல்லாம்
கிடக்க எனப் பறந்தேறிப் பாயும் காற்றாய்க்
கெடுக்குமனம்
கொண்டவரின் ஆர்வத்தாலே
அடக்குமுறை
மடலேந்தி அரிய ஓராள்
அவன்
குதிரை மீதேறி விரைந்து போனான். 51
தூதன்
மடலைக் கொடுத்தான்
மடல்கையாள்
நகர்வாயில் காப்போன் முன்னே
மனம்கனிய
அபூசகுலின் பெருமை பேசி
அடல்அரசர் கபீபுதம் அருமை
கூறி
“அபூசகுல் தூதன்யான்”
என்றுரைத்தான்
உடன்ஓடி
அரசர்பால் அவனும் சொன்னான்
உவப்புடனே
அனுப்புகென அரசன் சொல்லக்
கடன்முறையார்
அக்கருத்தை வந்து கூறக்
கைம்மடலான்
உடனோடி முன்னர் வைத்தான்; 52
|