மன்னர் படை நடத்திச்
சென்றார்
மடல்கொடுத்த செய்தியினை
மாந்தர்சூழ
மனம்கலந்தங்(கு) ஆராய்ந்தான் கபீபு
மன்னன்;
உடன்பட்ட மும்மறைகள் உரைக்கும்
கூற்றும்
உரைக்கின்ற அம்மடலின் அரிய
கூற்றும்
புடம்போட்ட பொன்னுரையாய் இருக்கும்
என்று
புகன்றவனாம் அரசன்முன் அறிஞர்
எல்லாம்
நடந்திடப்போம் வியப்பதனைக் காண்போம்
என்று
நல்லரசன் படைபோகத் தாமும் போனார்; 53
மக்கா நகரை
அடைந்தார்
ஊர்கடந்து நல்லூரைச் சுற்றி
உள்ள
ஓங்கெழில்
சூழ் அரண்கடந்து செழுமை மிக்க
நீர்நிலைகள்
தாம் கடந்து வயல்கடந்து
நெருங்கிய
சீர்கான் கடந்து கானைச் சூழும்
நேர்மலைகள்
கடந்துநிழல் மரம் கடந்து
நெருங்குமணல்
இடம்கடந்து மக்கா என்னும்
பேர்நிலைத்த ஊருக்குள் நெருங்கிப் போனார்
பெருநலத்து
நபியார்தம் முகத்தைக் காண; 54
செபுறயீல்
முகம்மது முன்னர்த் தோன்றினார்
நல்லூரின்
புறத்தே ஓர் குடிலை நாட்டி
நாற்படை
சூழ் கபீபரசர் தங்க லானார்;
அல்லாவின்
ஏவலினால் அழகு மிக்க
அருவானோர்
செபுறயீல்தம் இறக்கை வீசிப்
பல்லாரும்
போற்றுகிற நபியார் முன்னே
படர்ஒளி
செய் வெண்திங்கள் போல வந்து
“வல்லாரே! சலாமுரைத்தேன்
எல்லாம்வல்ல
வானவனின் ஏவலினால் வந்தேன்”
என்றார். 55
|