முகம்மதுவைச் செபுறயீல்
வாழ்த்தினார்.
இதுவரையில் செபுறயீல்
நற்காட்சிதந்த
இயல்பினிலே இல்லாமல் கால்கை
கண்ணும்
புதுமுறையில்
படைத்தவராய் எதிரே வந்தார்
புகழ்
நபியார் அன்னவரை அஞ்சிக் காண
இதமுறவே
நபியாரை வானோர் நோக்கி
“இனியவரே!
எவ்வுலகம் தனிலும் நீர்அற்
புதமுடைய
படைப்பாளர்” என்று வானப்
புகழ்ஒளியான் என்னிடத்தில் சொல்லச் சொன்னான். 56
சதைத் துண்டைப்
பெண்ணாக்கக் கூறுவர்
படைகளொடு
கபீபரசர் மக்கா வந்து
பக்குவமாய்
உமைக் காணத் தங்கி உள்ளார்;
கொடைஉளத்து
முகம்மதுவே உமக்குத் தொல்லை
கொடுத்திடவே
வரவில்லை இருந்த போதும்
தடையின்றிப்
புதுமைசெய வேண்டிக் கொள்வார்
தட்டாமல்
கேளும்நம் இறைவன் ஈவான்
முடைவீசும்
சதைத்துண்டைக் கொடுத்துப் பெண்ணாய்
முன்மாற்றிக்
காட்டுகென விரும்பிக் கேட்பார். 57
உம்மால்
எல்லாம் நடக்கும்
விரும்பி
அவர் கேட்கின்ற வற்றை எல்லாம்
விளைத்திடுவேன்
எனச்சொல்லி இறையைக் கேட்டால்
தரும்புகழோன்
இறைவன்எனச் சொல்லச் சொன்னான்;
தடையின்றிக்
கேட்டிடவும் கூறச் சொன்னான்;
அரும்புகழீர் எனக்கூற நபியார்
வானத்து
ஆண்டவனே! செபுறயீல்
வழக்கமாக
வருமுருவில்
வரச்செய்க என்று சொன்னார்
வந்தோரும்
அவ்வுருவே காட்டிச் சென்றார்; 58
|