கபீபு மன்னரை ஊருக்குள் தங்க
வைத்தார்
தூதுவர்கள் தெரிவித்த முறையால்
மன்னன்
தோன்றியுள செய்தி அறிந்து அபூசகுல் “தான்
ஆதரவு கேட்டதனால் அரசன்
வந்தான்
அகம்களித்தேன்” எனக்கூறித்
தன்சொல்கேட்கும்
தோதான வரைஎல்லாம் அழைத்துக்
கூட்டித்
“தொடர்ந்திடுக நாம் சென்று கபீபு
தன்னை
மூதூரில் தங்கவைக்க முயல்வோம்”
என்றான்
மூத்தவரும் உடன்பட்டார் ஒருங்கே போனார். 59
அபூசகுல் திறைகொண்டு
வந்தான்
அரிதான
பொருள்வகைகள் பலவும் கூட்டி
அழகான துணிமணிகள் பொன்னில்
வைத்த
பெரிதான
மணிவகைகள் இவற்றை எல்லாம்
பேருவகை
கொண்டமன அபூசகுல்தன்
எரிதீய
மனம்தன்னை மறைப்பதற்காம்
இயல்பினிலே
அடுக்கடுக்காய் எடுத்துக் கொண்டு
விரிதீமை
உளத்தார்கள் சூழச் சென்றான்
வெற்றிதருவார்
அரசர் என நினைத்தே! 60
எல்லாம்
இறைவனால் நடந்தது
வந்தவர்கள்
எல்லாரும் வணக்கம் சொல்லி
மகம்மதுவின் மீது குறை
கூட்டிச் சொல்லி
நொந்தவர்கள்
ஆனார்கள் நொந்த பின்னே
நூறுவகைத்
திறைப் பொருளும் பிரித்துக் காட்டி
முந்தவர்கள் அரசனையும் அழைத்துப்போய்
ஓர்
முழுநிலவு முற்றத்தில் தங்க
வைத்தார்
நந்தவத்து நாயகராம் நபியார்
மாண்பை
நாட்டுகிற இறைவன் அருட்
செயலினாலே! 61
***
|