பக்கம் எண் :

178துரை-மாலிறையன்

இறைவன் நலம் தருவான்

தீமையைக் கண்டும் நெஞ்சம் திகைக்காமல் மகிழ வேண்டும்
வாய்மையாம் இதனை எண்ணி வாழ்பவர் வீடு காண்பர்
நோய்மையார் நம்மைச்சுற்றி நொய்வினை செய்தால் அந்தத்
தாய்மன இறைவன்தானே தகுநலம் தருவான்” என்றார். 24

நபிபெருமான் கபீபு மன்னர்முன் போனார்

துணைமனம் மகிழுமாறு தூய்வினை நன்மை கூறி
இணையிலா இறைவன் மாண்பின் இனிமையை எடுத்துக்காட்டித்
திணைஎலாம் மகிழும் வண்ணம் தெருவினில் நடந்தார் அம்புக்
கணைஎலாம் வைத்த கையார் கண்முன்னே காணுதற்கே; 25

வானோர் கூட்டம் வந்தது

தெருவினைக் கடக்கும் போது திடுமென வான நீழல்
வருவதைக் கண்டார்; நீல வான்செபு றயீல்நல் லாரும்
அரும்படை அன்ன வானோர் அணிகளும் தொடரக் கண்டார்
வரும்படைப் பெருக்கம் அந்த வானத்தைக் கடந்தேகிற்றே 26

எதற்கும் அஞ்சாதீர் என்று இறைவன் கூறினான்

இடிஎனக் குரல் முழங்கி எதிர்செபுறயீல் நேர் வந்து
கொடியவர் செயலுக் கஞ்சிக் குனியாதீர்! இறைவன் சொல்லின்
படிஉமைக் காக்க வந்தேன் பாரில்நன் னெறியே ஓங்கி
முடிசூட வேண்டும் என்னும் முறைமையில் வந்தோம்” என்றார். 27

நபித்தோழர்களும் உடன் போயினர்

விண்ணவர் தமக்குத் தங்கள் வீரர்கள் குழுவைக் காட்டி
அண்ணலார் கபீபு மன்னர் அவையினை நோக்கிப் போனார்
வண்ணமாய் உமறு உதூமான் அலீஅபூபக்கர் வல்ல
புண்ணிய மக்கள் அன்னார் புறம்புறம் சூழ்ந்து போனார். 28

அபூசகுலே எதிர்பார்க்கவில்லை

அழைப்பினை ஏற்றுக் கொண்டே அகம்மது வருவார் என்று
பிழைப்புளத்து அபூசகுல்தன் எண்ணிலன் பெருமான் நெஞ்சம்
தழைப்புற வானோர் வீரர் தம்மவர் எல்லாம் சூழ்ந்து
தொழப்பகை வியக்க வந்து தோன்றினார் அவையின் முன்னே; 29