அரசர் போற்றினார்
கோமானைக் குளிர வைத்த கோதிலா நபியார் செய்கை
ஈமானை வெளிப்படுத்த எழுந்தவர் முன்னே வந்து
“நாம் ஆணை இட்ட வெல்லாம் நல்லோரே! பொறுப்பீர்” என்று
பூமானும் பாதம் தொட்டுப் போற்றினார் ஆங்கப்
போழ்தே! 84
அறியாமல்
நிந்தித்தோமே என்றனர்
வந்தவர்
தங்கள் தங்கள் வாய்மையால் நபியார் ஆற்றல்
சிந்தனை செய்த வண்ணம் சென்றனர் “ அறியாமையால்
நிந்தனை செய்திட்டோமே நேர்மைவிட் டோமே” என்று
வெந்தனர் உளத்தராகி வீட்டினை நோக்கிப் போனார். 85
மன்னனையே
ஏமாற்றி விட்டனர்
தொங்கிய
முகத்தான் அன்பு தோன்றாத அபூசகுல் போல்
மங்கிய மனத்தார் கூடி “மன்னரே, ஏமாந்தாரே
தங்கிய மக்கள் எந்தத் தகுதியும் பெற்றார்
அல்லர்
இங்கவர் ஏமாற்றத்தை எவர்தாமே தடுக்க வல்லார்? 86
பொறாமைக்
குணம் மாறவே இல்லை
இப்படி யான புன்மை இழிமொழி பேசிப் பேசித்
தப்படி வைத்துக் கொண்டே தாமடிக் கீழே சென்றார்
எப்படித் திருத்தினாலும் இனியவை தராமனத்தார்
முப்படி மேலே போனார் முழுவதும் பொறாமையாலே! 87
மக்கள்
மயக்கம் தீர்ந்தது
இருட்கடல்
தன்னை நீக்க எழிற்கதிர் வெய்யோன் கீழை
அருட்கடல் மேலெழுந்தான் ஆங்காங்குப் பதுங்கி வாழ்ந்தோர்
பொருட்கடல் மேலேழுந்து புரண்டிட விழித்தெழுந்தார்
மருட்கடல் மனம்தெளிந்தார் மகம்மது மாண்பைக் கண்டார். 88
***
|