பக்கம் எண் :

190துரை-மாலிறையன்

செபுறயீல் நல்ல செய்தி சொன்னார்

வானோர் தலைவர் செபுறயீல்தம்

வருகை யார்க்கும் தெரியாமல்

தேனார் தீஞ்சொல் முகம்மதுவே

தெளிவாய்க் கேட்க உரைத்தார்கள்

“வானத் தூதர் பெருமானே!

வள்ளல் இறைவன் சலாம்தன்னை

நானே கொண்டு தருகின்றேன்

நல்லசெய்தி யொடும் வந்தேன்” 5

வேண்டுங்கள் தசைத்துண்டு பெண்ணாக மாறும்

“மன்னர் கபீபு கொணர்ந்துள்ள

மகளின் உருவம் சதைப்பிண்டம்

தன்னை எடுத்துக் கொண்டுபோய்த்

தாழ்ந்து வணங்கும் ககுபாவில்

முன்னே வைத்துக் கம்பளியால்

முழுதும் மூடி ஆபுசஞ்சம்

தண்ணீர் எடுத்துத் தெளியுங்கள்

தாழ்ந்து தாழ்ந்து வேண்டுங்கள்” 6

வேண்டுவதை இறைவன் தருவான்

“ஒளிசேர் இறைவா! சதைப்பிண்டம் உருவம் ஆக அருள்கஎன
எளியோர் துன்பம் களைகவென ஏங்கி ஏங்கிக் கேளுங்கள்
ஒளியான் இறைவன் உருவத்தை உடனே வரச்செய் வா”னென்றே
வளியார் வானம் போனாரே வாய்மைஉரை செய் வானோரே. 7

ககுபாவில் வேண்டினர்

பெருமான் நபியார் கோமானும் பிழையில் லாதார் நற்கபீபும்
ஒருங்கே சென்று ககுபாவை ஒட்டி அமர்ந்து கொண்டதன்பின்
“தருக தசையை” என்றார்கள் தந்தப் பெட்டி தனில்உள்ள
பெருத்த தசையாம் கட்டியினைப் பெருமான் முன்னே வைத்தார்கள் 8

வெற்றுத் தசைப்பிண்டம்

அரிய கட்டித் தசையினையே அணங்காய் மாற்றும் செய்தி வர
உரிய மக்கா மக்களெலாம் ஒருங்கே வந்து திரண்டார்கள்
தெரிய வைத்த சதைக்கட்டி சிறுகால் கையோ பெறவில்லை
விரியும் முடிகொள் தலைஇல்லை வெற்றுத் திரட்சி சதை யாகும். 9