பக்கம் எண் :

194துரை-மாலிறையன்

கபீபு மன்னர் தம் நாடு அடைதல்

காட்டையும் கடந்தார் நாட்டையும் கடந்தார்

கவின்பல கோட்டையும் கடந்தார்

நாட்டியம் ஆடும் தாவரச் சோலை

நறும்புனல் ஓடையும் கடந்தார்

ஈட்டிய ஈச்சங் கனிக்குலைக் களங்கள்

எங்கணும் கண்டனர் கடந்தார்

நீட்டிய மரங்கள் நெருங்கிய மலையின்

நிரைகளைக் கடந்து சென்றனரே! 20

திருக்குர்ஆன் மாண்பைப் பரப்பினர்

உண்மையும் நல்ல உளங்களும் விரிய

உரைத்திடும் திருக்குர்ஆன் மாண்பை

வண்மையும் அன்பும் வளம்பெறக் கொண்டு

வாழ்மணி வேந்தராம் கபீபு

தண்மையும் இனிய தன்மையும் பரவத்

தம்பெரு நாட்டினில் பரப்பி

மண்மையில் விண்மை மலர்ந்திடச் செய்தார்

மகம்மது தனிநலம் நினைந்தே. 21

நபிபெருமான் அவர்களுக்கு மன்னர் பரிசுஅனுப்புதல்

உள்ளகம் வெதும்பி உணர்வெலாம் மழுங்கி

உலகினில் வீழ்வுறா வண்ணம்

வள்ளலே நம்மை மலர்த்தினர் என்னும்

வாய்மைசேர் நன்றியை நினைத்துச்

சொல்லருஞ் சிறப்பின் சுடர்மணி வகையும்

தூயபொன் நிரைகளும் நிரப்பி

அள்ளவும் குறையா அளவினில் செல்வம்

அத்தனை வகையையும் கூட்டி; 22