|
அளவில்லாப் பரிசுகள் அனுப்பினார்
ஒட்டக நிரைகள் ஒன்பதும் ஒன்றும்
உறுசுமை சுமந்திடும்
மு.துகில்
கட்டிய மணிபொன் கட்டிகள் எல்லாம்
கணக்கிலா முறையிலே ஏற்றிப்
பட்டினால் நெய்த பலவகைத் துணிகள்
பதமுறப் பெட்டியில் அடுக்கி
ஒட்டிய வீரர் காத்துடன் வரவே
உவகையோடு அனுப்பி வைத்தனரே! 23
பரிசினைக் கண்ட மக்கா மக்கள் மகிழ்ச்சி
உயர்படை வீரர் ஒட்டியே வந்த
ஒட்டக முதுகினில் எல்லாம்
வியன்பெரும் பரிசு விளங்குதல் கண்ட
வெற்றிகொள் மக்கமா நகரார்
“நயம்படக் கபீபு நல்லக மன்னர்
நபிபெருமான் மணி தமக்குப்
பயன்படும் படியே பரிசனுப்பியுளார்
பார்மினோ”எனச் சொல்லிக் களித்தார். 24
அபூசகுல் பொறாமை அடைந்தான்
அவற்றினைப் பார்த்த அபூசகுல் கயவன்
அழிமனப் பொறாமைமிக் கவனாய்
“அவர்தமை ஈங்கே அழைத்தவன் யானே
அரும்பொருள் எலாம் செலவழித்தேன்
தவறதுபுரியும் தகா நெறிய னுக்குத்
தரும்பொருள் இவைஎலாம் இல்லை
இவற்றைஎம் மன்னன் எமக்கென அளித்தான்
எம்மிடம் தரு”கெனக் குதித்தான். 25
|