|
ஒட்டகம் பேசக் கேட்டவர் மகிழ்ந்தார்
கனிவுள எங்கள் கபீபு மன்னவனார்
கவின் முகம்மது நபியார்க்குப்
பணிவுடன் இந்தப் பரிசுகள் எல்லாம்
பரிவுடன்அனுப்பி வைத்தவை” என்று
இனியநற் குரலால் இயம்பிய உடனே
இசைந்து நின்றவரெலாம் கேட்டு
நனிமிக வியந்தார் நற்றவ நபியின்
நறும்புகழ் அதனையே நயந்தார். 35
பரிசுப் பொருள்களை ஏழைகளுக்கு அளித்தார்
ஆள்வினை தனக்கும் அழிபழி சூட்டும்
அபூசகுல் மனம்தடு மாறிக்
கோள்வினை கடுஞ்சொல் கொடியவஞ்சகமும்
கொண்டவனாய் அகன்றிடவே
மேல்வினை புரியும் வெல்முக மதியார்
மேவிய பொருள்களை எல்லாம்
தோள்வலி இல்லா முதியவர் ஏழை
தூயவை நாடிடும் நெறியார்; 36
நபிபெருமானின் மனிதநேயம் கண்டு வியந்தனர்
நோயுளார் வாழ்வில் நொடிந்தவர்
மற்றும்
நொந்திடும் உளத்தவர்க்
கெல்லாம்
நேயமும் அருளும் நிறைமன
வளத்தால்
நீட்டியே எடுத்தெடுத்து
அளித்துத்
தாயெனும் படியே தம்மனத்
துயர்வால்
தந்ததைக் கண்டவர்
முகத்தில்
ஈஎறும் பாடா இயல்பினில்
நின்றார்
இணையிலார் மாண்பினை நினைந்தே. 37
|