பக்கம் எண் :

202துரை-மாலிறையன்

ஒட்டகம் ஏந்திச் சென்றன

ஓலை மட்டும் அனுப்பாமல் ஒட்டகங்கள் பலவற்றின்
மேலே வைத்த பொன்மணிகள் மேன்மையான துணிவகைகள்
காலைப் பரப்பி ஒட்டகங்கள் கவிழ்ந்து வீழும் வகைசுமையைப்
பாலை மனத்தான் அபூசகுல் தான்பரிசாய் அனுப்பி வைத்தனனே; 48

இன்று முளைத்த காளான் முகம்மது என எழுதினான்

எழுதி விட்ட ஓலை யினில் எண்ணம் இழிந்த அபூசகுல்புன்
புழுதி வாரித் தூற்றுதல் போல் பொய்யே கக்கி வைத்திருந்தான்
தொழுது யான் சொல் விண்ணப்பம்; தூய மன்னர் அறிந்திடுக;
முழுதும் சிறந்த மக்காவில் முளைத்த காளான் முகம்மதுவே; 49

சீச்சீ இவனை எவரும் விரும்ப மாட்டார்

ஆசிம் குலத்துப் பெருமையினை அழிக்க வந்த கோடரியே!
பேசும் பேச்சில் நலமில்லான் பிழையே செய்யும் உளமுள்ளான்
பாசிபட்ட பழமரபோ பரமன் உறவை ஒழித்திடுமாம்;
சீச்சீ! இவன்சொல் முறைஎல்லாம் சிறியோர் கூட ஒப்பாரே! 50

முகம்மது அடுத்துக் கெடுப்பான்

அழகாய்ச் சிலைகள் அமைக்கின்றோம்

அதிலே கடவுள் உறைகின்றான்

தொழப்போகின்ற நம்மையவன்

தூசு போல மதிக்கின்றான்;

பழகா முறைகள் பகர்கின்றான்

பணிந்து பணிந்து தொழுகின்றான்

முழுதும் கெடுத்தான் மக்காவை

முயல்வான் அடுத்தே கெடுத்திடுவான்; 51

அங்கு வந்தவரைத் துரத்தி விடுங்கள்

அவனைப் போன்ற கொடியர்களை அரசே உம்மூர் அனுப்பியுளான்
தவணை முறையில் அனுப்புகிறான் தவறும் அதுபோல் செய்திடுவான்
அவனால் தீமை வருமென்றே அறிவிக்கின்றேன் முதன்முதலில்
எவரானாலும் துரத்திடுவீர் என்றே முடங்கல் எழுதினனே; 52