அபூசகுலின் பாவச் செயல் புரிந்தது
முடங்கல் கருத்தைத் தன் அவையுள்
முன்னே இருந்த அறிஞரிடம்
தடங்கல் இன்றித் தெரிவித்தான்
தலைவன் அதனைக் கேட்டவுடன்
உடன்போய் உண்மைதனை நன்றாய்
ஒட்டிச் சென்றே ஆய்ந்தார்கள்
படங்கள் போலப் பளிச்சென்று
பாவம்செய்வான் நிலை கண்டார். 53
அரசன் பரிசுகளைத் திருப்பி அனுப்பினான்
பகைநெஞ் சத்தால் அபூசகுலே பண்ணும் கயமை இதுவாகும்
தொகையும் மணியும் தந்துள்ளான் தொடவே மாட்டான் கையூட்டைத்
தகையோர் தம்மைப் பழிவாங்கத் தந்த பாவம் இவைஎல்லாம்
வகையாய் வாரிக் கொண்டுடனே வந்த வழிச் செல்வீர்” என்றே; 54
அரசனுக்கு அபூத்தாலிப்பின் மடல்
முறையே செய்த நெடுவேந்தன் முயன்ற தீயன் அபூசகுலின்
கறையை அறிந்த காரணத்தால் களித்தவர்அபூத் தாலிப்பு;
நிறைவான் பெருமை உணர்ந்தவரே! நிலையா வாழ்வை அறியாமல்
குறையே செய்தான் அபூசகுல்தன் குற்றம் அதனைப் பொறுத்திடுவீர்; 55
நபித் தோழர்களுக்கு அரசன்உதவி தொடர்ந்தது
அரியோர் போற்றும்
முகம்மதுவின்
அருமை உணர்ந்தீர்
எனக்கூறிப்
பெரிதோர்
கவிதை மடல்எழுதிப்
பிழைஇல்
லாத மன்னவனுக்கு
உரிய முறையில்
அனுப்பி வைத்தார்
உயர்ந்த
மன்னன் அதுபெற்று
விரிவாய் மேலும்
நபித்தோழர்
விரும்பும்
உதவி புரிந்தானே; 56
|