பக்கம் எண் :

204துரை-மாலிறையன்

அபூசல்மா மக்காவுக்குத் திரும்பினார்

பன்னாள் ஆங்கே கழிந்தவுடன் பலரும் போற்றும் மக்காவில்
நன்னாள் தோன்றி உள்ளதென நவின்ற சிலபேர் உரைகேட்டு
முன்னால் சென்றார் சிலபேருள் முன்னே இருந்தார் அபூசல்மா
அன்னார் அபூத்தா லிபு வீட்டின் அடைக்கலமாக இருந்தாரே; 57

அடைக்கலம் கொடுக்காதீர் என்றான் அபூசகுல்

உண்மை நெறியைப் போற்றுகிற உயர்ந்தோர் தம்மை வெறுத்திடுவோர்
தன்மை இல்லா முறையுடனே தக்கோர் அபூத்தா லிபுவிடத்தில்
“நன்மை இல்லா மனத்தானை நாடி வீட்டுள் வைத்துள்ளீர்
வன்மையாகச் சொல்கின்றோம் வலிய அவனைத் துரத்திடுவீர்; 58

உம்மை ஊர் விலக்கம் செய்வோம்

இன்றேல் உம்மை ஊர்விலக்கம்

இப்போ தேநாம் செய்திடுவோம்

என்றே அவர்கள் சொலக்கேட்ட

இனியநல்லான் அபூலகபு

“கொன்றால் போன்ற சொல்சொன்னீர்

கொடுமை இதனைப் பொறுப்பேனோ?

நன்றென் றிதனைச் செய்வீரேல்

நானும் உமக்குப் பகையாவேன். 59

அபூலகபுவுக்குத் தீயோர் அஞ்சினார்

புடலங்காயைப் பறித்திடுவோர்

பொல்லாப் பாம்மைக் கண்டவர்போல்

அடல்ஏறன்ன அபூலகபின்

அசையா உளத்தை உடன்கண்டு

கொடுந்தேள் கண்ட கள்ளர்போல்

கூனிக்குறுகிச் சென்றார்கள்

வடுவில்லாத முகம்மதுவோ

மக்கா நகருள் உறைந்தாரே! 60

***