பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்217


மக்காவினர் உதவியால்தான் வெல்ல முடியும்

“வெற்றி அடைய வேண்டுமெனில் விரைந்து நாம்போய் மக்காவில்
உற்ற வீரர் உதவியினை உடனே பெற்றால் தான் முடியும்;
குற்றம் இல்லா நமக்கவர்கள் கொடுப்பார் உதவி” எனக்கூறிக்
கற்றோர் அயாசின் தலைமையுடன் கருத்தைக்கூற அனுப்பி வைத்தார்; 41

இசுலாமின் பெருமையைக் கூறினார்

உதவி கேட்டு வந்துள்ள உரிய அவசு குலத்தாரை
முதலில் சென்று சந்திக்க முனைவர் பெருமான் புறப்பட்டார்
இதமாய்ப் பதமாய் இனியமொழி இயம்பி இசுலாம் சிறப்பினைஅற்
புதமாய்க் கூறிக் கவர்ந்தபிரான் புகழைக் கண்டார் வந்தவரே! 42

ஒரு நாள் செபுறயீல் வந்தார்

வெற்றி நோக்கி வந்துள்ளீர் விரைவில் உம்மை நாடிவரும்;
கற்றீர் யானும் உரைப்பதனைக் கருத்தாய் உற்றுக் கேளுங்கள்;
நற்றேன் கமழும் செவ்விதழார் நல்லோர் வானோர் செபுறயீல்
உற்றார் என்முன் ஒருபெருநாள் உவந்தேன் அவர்முன் வணங்கி

நின்றேன்; 43

நீங்கள் எல்லாம் கலிமா ஓதினால்...

பட்டம் நபியைப் பரிந்தளித்தார் பட்டுத் துணியும் உடன் அளித்தார்
சுட்டிக் காட்டித் திருக்குர்ஆன் தூய்மை தனையும் சொல்லியவர்
ஒட்டி வணங்கும் முறையினையும் ஓதிக் காட்டி வான் போனார்;
அட்டி இன்றி நீவிரெலாம் அதன்மேல் ஈமான் கொள வேண்டும்; 44

அயாசு சம்மதம் தெரிவித்தார்

“போற்றி உரைக்கும் கலிமாவாம் பொருந்தும் மூல மந்திரத்தை
நாற்றி சைக்கும் செல் வண்ணம் நன்றே உரைப்பீர் ஆமாயின்
ஏற்றி வெற்றிக் கொடி முன்னே என்றும் மகிழ்வீர்” எனச் சொன்னார்
ஆற்றல் பெற்றார் போலான அயாசும் உடனே சரிஎன்றே; 45

அயாசு வென்றார் - கசுரசுதோற்றார்

அமைந்த மதினா நகர் சென்றே அனைத்தும் மக்கள் முன்வைத்தார்
சமைந்த மற்றோர் போர் முன்னே சரிந்தார் கசுரசு இனத்தாரே
நமக்கு நல்லோர் சொன்னது போல் நாடி வெற்றி வந்ததுவே
இமைக்கும் நொடியில் எழில் நபியார் இயம்பியவாறே வென்றோமே! 46