பக்கம் எண் :

238துரை-மாலிறையன்

நாங்கள் என்ன உண்ண வேண்டும்?

மன்னவா! நாங்கள் உண்ணும் மதிப்புறும் உணவு யாது?
தின்னவே வேண்டா வற்றைத் தெரிவிக்க வேண்டுமென்று
பன்னியே சின்கள் கேட்கப் பணிவுடன் அண்ணல் கோமான்
மன்னிய கருத்துரைகள் வழங்கினார் அவற்றி னுக்கே. 86

புள்-விலங்கு எலும்புகள் தின்க

“அல்லாகூ அக்பர்” என்றே அறைந்தபின் அறுக்கப்பட்ட
எல்லாப்புள் விலங்கு தங்கள் எலும்பையும் உணவாய் உண்க
நல்லார்கள் விலங்கு தின்ற நல்லுணா தன் எச்சத்தை
வல்லமை யான உங்கள் விலங்குகள் தின்னும்” என்றார். 87

தோழர்களுக்கு அறிவித்தார்

பகர்ந்ததைக் கேட்ட அந்தப்பன்னிரண் டாயி ரம் சின்
அக மகிழ்ந் தனவாய்த் தங்கள் அகத்தினுக்கு ஏகிச் செல்ல
நகர்களில் சிறந்த மக்கா நகரினில் தங்கித் தோழர்
அகம்தொட நடந்தவற்றை அறிவித்து மகிழ்ச்சி கொண்டார். 88

எஞ்சிய எலும்புகளைத் தூய இடம் வைப்பீர்

இசுலாமியர்கள் உண்ட எஞ்சிய இறைச்சி தன்னை
நசையுடன் சின்கள் தின்னல் நலமெனச் சொல்லி உள்ளேன்
அசைவிலா உளத்தீர்! நீங்கள் அங்ஙனம் ஆகும் ஊனை
இசைவுடன் தூய தான இடத்திலே வைப்பீர்” என்றார். 89

பெரியோனை வாழ்த்தினர்

பொறுமையாய் அருகிருந்து போற்றியே கேட்ட தோழர்
பெருமையார் தம்மைப் போற்றிப் பெருகிய சின்கள் போற்றி
ஒருமையாய் ஒன்று சேர்ந்தே உயர்ந்தவன் புகழை வாழ்த்தி
உரிமையாய் நபியார் சொன்ன உயர்நெறி தனில் நின்றாரே. 90