அனைவரும் வாழ்த்திப் போனார்
நிறைவாக அனைவருமே உண்ட பின்பும்
நேரிருந்த கலத்துணவோ குறையவில்லை
மறைவான வர்களாலும் செய்ய ஒண்ணா
மகனாரின் புதுமை மிகு செயலைக் கண்டார்
இறையவனின் தூதருக்கே இயலாச் செய்கை
இவ்வுலகில் இல்லைஎன முடிவு செய்தார்
பிறைவான முதலோனைப் புகழ்ந்து கொண்டே
பெரியோரும் சிறியோரும் வாழ்த்திப் போனார். 115
|