பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்259


முகம்மது இபுலீசைக் கடிந்து கொண்டார்

சொன்னவனாம் இபுலீசு மக்கள்முன்

தோன்றாமல் சொல்லி ஏய்த்தான்

அன்னவனின் சொல்கேட்டு மயக்கமுற்ற

மக்காமேல் அன்பு கொண்ட

முன்னவராம் முகம்மது முன்வந்த

இபுலீசை முனிந்து நோக்கிச்

“சின்னவனாய் நடக்காதே இபுலீசே!”

எனச்சொன்னார் சினத்தி னாலே! 4

மக்கா மக்கள் மதீனா மக்கள் வருந்தும்படி பேசினர்

பழிக்கஞ்சாப் பாதகனின் உரைகேட்ட

மக்காவின் பாவ மக்கள்

வழிக்கண்ட மதீனாவின் மக்கள்எலாம்

தாம்வருந்த, “மக்கா தன்னை

ஒழிக்கத்தான் வந்தீரோ அன்றிநீங்கள்

விழாக்கண்டே ஓங்கத் தானோ?

விழிக்கத்தான் போகின்றீர்” எனவெகுண்டு

மக்கத்தார் வினவி னாரே! 5

மதீனா மக்கள் அடங்கிப் போயினர்

தவறில்லா தவரிடத்தில் தவறுடையோன்

தன்பேச்சால் தவறாய்க் கேட்க

எவரிவர்கள் ஏதேதோ பேசுகிறார்

எனக்கலங்கி மதினா மக்கள்

“நவையில்லார் நாம்வருந்தப் பேசுகின்றார்

எனக்கூறி நடுக்கம் கொண்டே

அவரவர்கள் தம்மிடத்தை அப்போதே

போய்ச்சேர்ந்தார் அடக்கத்தோடே; 6