|
முகம்மது உடன்பிறந்தே கொல்லும்
நோய்
நம்முடன் பிறந்தே நம்மை நலிவிக்கும் நோய்என்பார்கள்
நம்மூரான் முகம்மதென்பான் நமக்குநோய் போல உள்ளான்
செம்மாண்பு நெறியாம் ஒன்றைச் செப்பியே திரிகின்றானே
நம்மாலே அவனை இன்னும் நசுக்கிட இயல வில்லை; 15
செயத்தக்கதைச் செய்ய
வேண்டும்
செய்தக்க அல்ல செய்தால்
செய்பவன் கெடுவான் என்பர்
செய்தக்க செய்யான் கூடக் கெடுவதும் திண்ணம் ஆகும்
உய்தக்க வழியை நாடும் உளத்துடன் பொய்யன்
தன்னை
மெய்தாக்கி அழிப்பதொன்றே மேன்மையோர் செயலாம்
அன்றோ? 16
மதீனாவில் இசுலாத்தைச்
செழிக்க விடக்கூடாது
பொன்னகர் மதீனா நாடிப் போயினார் இசுலாம் மக்கள்
அன்னவாறு அகலு தற்கே அருந்திட்டம் போட்டுள் ளானாம்
மன்னிய இசுலாம் ஆங்கே மலர்ந்து நேர் செழிக்கு மானால்
முன்னமே இருக்கும் நந்தம் முறைஎலாம் போவ தெங்கே? 17
கரும்பு போல் இனிக்கப்
பேசினான்
என்ன நாம் செய்தோம் என்றே எண்ணிநாம் கலங்குமாறு
சின்னவர் செழிக்க விட்டுச் சிந்தனை அற்றிருந்தால்
பின்னரோ வருந்த நேரும் பிழைவந்து சேரும்” என்றே
கன்னல்போல் மொழியே பேசிக் கலக்கினான்
மக்களையே! 18
ஒருவன் நஞ்சு கக்கினான்
கலக்கியோர் தமக்குள் நஞ்சு கக்கினான் ஒருவன், “ஐய
குலத்தினை அழிக்க வந்த கோடரிக் காம்பே போன்ற
உளத்தவன் முகம்மதுக்கே ஓங்கிடும் புகழில் லாமல்
நிலத்தினில் மாய்க்க வேண்டும் நேர்செயல் இதுவே”
என்றான். 19
வீண்காலம் போக்கக்
கூடாது
கொல்லத்தான் வேண்டும்
ஆனால் கொலையினை மறைக்க வேண்டும்
வெல்லத்தான் வேண்டும் ஆனால் விரைவுடன் செய்ய வேண்டும்
மெல்லத்தான் பேசியேநாம் வீண்காலம் போக்கி விட்டால்
வெல்லம்தான் அவன்வாய்க் கேநாம்” விளம்பினான் ஒருவன்
தீங்கே! 20
|