3. மதீனா நகர் புக்க
படலம்
கொடியோர் வேற்றிடம்
சென்றார்
இந்த மலையின் குகையுள்ளே இருக்க வழியே இல்லைஎன
முந்தி இருந்த சிலந்திவலை முட்டைப்புறாக்கள் நிலைசொல்ல
வந்த கொடியோர் தள்ளாடி வருந்து மலையின் கீழ்ஓடிச்
செந்தீச் சினத்தால் எரிந்தார்கள் சிறியோர் ஆன பெருமையினால்; 1
முகம்மது கண்ணுறக்கம்
மேற்கொண்டார்
தீமை நெருங்கி விலகியபின் செம்மல் நபியார் அபூபக்கர்
ஆம்மலர்க்கண் விழித்தபடி அமைதியாக இருக்க அவர்
காமர் மடிமேல் தலைவைத்துக் கண்ணுறக்கம் மேற்கொண்டார்
தாமரைக்கண் வானோர்கள் தகுந்த காவல் புரிந்திடவே; 2
அபூபக்கர் பாம்பு வரக்
கண்டார்
குகையின் உள்ளே இருக்கின்ற குறுங்கல் இடையே அமைந்தபெரும்
பகையே போன்ற புற்றுக்கள் பலவும் இருக்க அதன்வழியே
பகுநா நீட்டித் தலைகாட்டிப் பைங்கண் உருட்டிக் கரும்பாம்பு
முகமாமதியார் முன்தோன்றும் முயற்சி கண்டார்
அபூபக்கர்; 3
பாம்பு தலையை நீட்டுகிறதே!
கொடிய பாம்பு வெளிவந்தால் கொத்தும் உயிரும் முடிவாகும்
கடியாப் பண்பு பாம்புக்குக் காணக் கூட முடியாதே
நெடியோர் உறங்கும் வேளையிலே நீட்டி நீட்டிப் பார்க்கிறதே
முடிவே செய்து வந்ததுவோ? முதலில் என்ன செய்வதென; 4
பொந்துகளை அடைத்தல்
எண்ணிக் கலங்கி நல்லோர்தம்
இனிய மென்மேல் ஆடையினை
வண்ணமாகக் கிழித்ததனால் வாய்த்த பொந்தை
அடைத்தார்கள்
கண்ணில் தோன்றி இப்பாம்பு கடிக்க இனிவா
ராதென்றே
எண்ணி அமையும் அப்பொழுதே இனும் ஓர் பொந்தில்
நீட்டியதே! 5
மீண்டும் மீண்டும் தலையை
நீட்டியது
நீட்டும் தலையை உடன் கண்டு நெடியோர் மீண்டும் அடைத்தார்கள்
காட்டுமோ தன்தலை இனியே காட்டா தென்றே அமைந்துவிட
மீட்டும் ஓர்பொந் ததன்வழியே மெதுவாய் நீட்டிக் காட்டிவர
ஆட்டம் காட்டும் பாம்புதனை அறவே மடக்க எண்ணமிட்டார்; 6
|