| 
       
      ஒட்டகம் கொண்டு வந்தான்
       
      
      அடைக்கலம் தந்த தவுர்மலை
      அதனில் அன்பரும் அகம்மது தாமும் 
      கொடைக்குணத் திறைவன் கொள்கையின் வழியேகொடியவர்
      கண்படா வண்ணம் 
      இடைக்குலம் உலவும் எழில்மலை தங்கி ஈரிரு நாள்செல இரவில் 
      நடைக்குநன் குதவும் ஒட்டக விலங்கை நல்லவன்
      கொண்டுவந் தளித்தான்.  19
       
      
      மதினா நோக்கிச் சென்றனர்
       
      
      ஒட்டகம் மீதில் தனிமுகம்மதுவும்
      உடன் அமிறா அபூ பக்கர் 
      ஒட்டிய மற்றோர் ஒட்டகம் ஏறி உறுபணி யாள்வழி காட்டிச் 
      சுட்டிய வழியே சுடர்மதி னாவை நோக்கிய திசையினில்
      சென்றார் 
      கட்டியம் கூறும் நிலையவன் போலக் கதிரவன்
      கீழ்த்திசை எழுந்தான்.	20
       
      
      ஓர் இடைச் சிறுவன்
      வந்தான்
       
      
      வெயில்வழி நடந்து விளைந்தமெய்க் களைப்பால்வேர்வையும்
      சோர்வையும்களைய 
      நயவுரைக் கோமான் நல்லிடம் நாடி நலம்பெற ஓய்வுடன் படுத்தார் 
      அயல்ஒரு சிறியோன் ஆயனும் கண்டான் அவர்முனம்
      கனிவுற நின்றான் 
      இயல்பொடும் தனக்கே உரியதாம் ஆட்டின் இனியபால்
      கறந்தளித்தனனே.  21
       
      
      அபூசகுலின் அடியவன் வந்தான்
       
      
      மகம்மது நபிகள் நாயகம்
      மதினா மாநகர் விரைந்திடும் போதில் 
      அகமிருள் கவிந்த அபூசகுல் அடியான் அரும்குதிரையின்மேல்
      ஏறிப் 
      புகை மனச் சுறாக்கத் தவண்வரக்கண்டே புகழ்அபூ பக்கரும் வெகுண்டார் 
      தகுமுகம்மது நேர் தலைவரும் கண்டார் தடுத்திட
      ஆர்வுடன் எழுந்தார்.      22
       
      
      மண்ணே! குதிரையின் குளம்புகளைப்புதைத்துக்கொள்
       
      
      வருபவன் எங்கள் வழிதடுத்
      திடுவான்
       
      
      வருகிறான் ஆதலினாலே
       
      
      பெரும்புவி மண்ணே! பேதையின்
       
      
      குதிரை பிறங்கெழில் காற்குளம்பு அவற்றை
       
      
      அரும்புவி உனக்குள் அழுத்தியே இறுக்கி
       
      
      அசைந்திடா வகையிலே பிடித்து
       
      
      வரும்பரி ஓட்டம் தடுஎன உரைத்தார்
       
      
      வையமும் அடிபணிந் ததுவே!						  23
       
   |