பக்கம் எண் :

294துரை-மாலிறையன்

என் உணவைத் தடுத்து விட்டாய்

உற்ற நோய்ப் பசியால் வாடி ஒடுங்கிய எனக்கி றைவன்
இற்றை நாள் உணவைத் தந்தான் இடையனே! பறித்து விட்டாய்
கற்றவர் குலத்து மாந்தன் காட்டிலா இரக்கப் பட்டாய்;
முற்றவும்” என்று வேங்கை மொழிந்ததைக் கேட்ட போதில்; 6

பேசுவது யார்?

மக்களில் லாத காட்டில் மணிஉரை கூறல் யாரோ?
ஒக்கலும் உறவும் மற்ற உரிமையோர் எவரும் இல்லா
இக்கவின் காட்டில் இவ்வா(று) இயம்புவார் எவரோ? என்று
தக்கவன் இடையன் சொற்கள் தாம்வரும் வழிமேல் பார்த்தான். 7

இது அன்று புதுமை

தொலைவில்அப் புலிதான் இந்தச் சொல்லினைச் சொல்லிற் றென்ற
நிலையினில் பிளந்த வாயை நேர்மூடா திருந்தான் கண்ட
புலியது “மாந்த” இந்தப் புதுமையை விடவும் மிக்க
வலியதோர் புதுமை உண்டு வழங்குவேன் கேளாய்! ஈங்கே; 8

மக்கள் இழிகின்றார்களே

தூயவன் தூத ரான தோன்றலார் நபியார் தோன்றி
ஆயநன் னெறிகள் எல்லாம் அரியவாய் அருள்கின் றார்கள்;
தீயுபுன் னெறியில் போகும் தேயத்தார் இறைவன் காட்டும்
நேயநன் னெறியை நீங்கி நீர்மை அற் றழிகின் றாரே! 9

தெளிவற்று வாழ்கின்றார்களே!

விண்ணகத் தூதர் அன்பு விளையவே மண்ணில் தோன்றிக்
கண்ணகல் அருளைக் காட்டிக் காக்கவே உரைசெய் கின்றார்
வண்ணமாய் அவற்றைக் கேட்டு வாய்மையின் நெறிநில்லாமல்
திண்ணமாய் அழிகின்றாரே தெளிவினை அற்றிந் நாளே! 10

இறைவன் புகழை மறக்கின்றார்களே!

எளியவர் ஏழை மக்கள் ஏற்றமே காணும் வண்ணம்
ஒளியவன் தூத ராக உற்றவர் நபியார் வான
வெளியரும் போற்றும் செம்மல் விளம்பிடும் நெறிபோற் றாமல்
அளியவ ராக மக்கள் அவர்புகழ் மறக்கின்றாரே! 11