பக்கம் எண் :

300துரை-மாலிறையன்

ஓநாய் மான்களைத் துரத்தியது

மக்கா தன்னைச் சூழ்ந்துள்ள மலையின் தொடரில் மான்கூட்டம்
மிக்க ஆர்வம் தான்கொண்டு மேய்ந்து மகிழ்ந்து வாழுகையில்
அக்கால் வந்த ஓர்ஓநாய் ஆண்மான் பெண்மான் குட்டிஎலாம்
தக்கஇரையாய்க் கிடைத்தவெனத் தாவிப் பிடிக்கச் சென்றதுவே. 40

மான்கள் சிதறி ஓடின

தலையைத் திருப்பி மான்கூட்டம் தாம் ஓநாயைக் கண்டவுடன்
நிலையைப் புரிந்து கொண்டனவாய் நெடுக்கும் குறுக்கும் தடுமாறித்
தலைதெறிக்க ஓடிடவும் தணியா ஆர்வ ஓநாயும்
மலைக்கு மலையே தாவுதல்போல் மான்கள் பின்னே தாவியதே 41

ஒரு மான் ககுபதுல்லாவுக்குள் நுழைந்து கொண்டது

மான்கள் எல்லாம் ஓடிவிட மாறா ஆர்வ ஓநாயோ
தான்ஓர் பெண்மான் பின்னோடித் தாவிக் கொல்ல முயன்றவுடன்
போன பெண்மான் புனிதமுறு புகழ்சேர் ககுபத் துல்லாவின்
வான்சீர் அறமாம் இடத்தோடி வகையாய்த்தப்பி நின்றதுவே. 42

ஓநாய் உள்ளே போகவில்லை

துரத்திச் சென்ற அவ்ஓநாய் தொலைவில் நின்ற மான்நோக்கி
இரத்த வெறியை மிகக்கொண்டே இனியும் முயன்றே உள்போனால்
அறத்தை மீறிச் செய்கின்ற ஆகாச் செயலாம் என எண்ணிப்
புறத்தில் நின்றே அமைதியுறும் பொழுதில் கண்டார் பாவியரே! 43

மான் தப்பித்துக் கொண்டதே

ஆபா சுபியான் அபூசகுல் அழிக்கும் சபுவா எனும் மூவர்
நேர்பாய்ந் தோடும் அம்மானின் நெஞ்சைக் கவும்ஓநாய் இன்னே
மார்பைப் பிளந்து குருதியினை மாந்தும் என்றோம் ககுபாவின்
சார்பாய் ஓடி மானதுவும் தப்பிற் றென்றே தவித்தார்கள். 44