பக்கம் எண் :

32துரை-மாலிறையன்

அம்மா நானும் ஆடுமேய்க்கப் போவேன்

“அண்ணார்கள் போவதுபோல் அம்மா யான்

கால்நடைமேல் அன்பு காட்டித்

தண்ணார்பைங் கானகமே நாள்தோறும்

செலவேண்டும் தயக்க மின்றிப்

பண்ணார்செங் கவின் இதழால் உடன்பட்டுப்

பகர்கென்று பன்னிப் பன்னி

விண்ணார்ந்த குரிசிலரும் விழைந்தமனக்

கருத்ததனை விளம்பி னாரே; 4

கொடுமையான காடாயிற்றே

கள்ளிருக்கும் மொழிகேட்ட கனிமுகத்துத்

தாய்அலிமா கவலை யோடும்

“முள்ளிருக்கும் கொடும் புதர்கள் முளைத்திருக்கும்

புற்றுக்குள் முகத்தைக் காட்டிப்

பல்லிருக்கும் நச்சுடைய பாம்பிருக்கும்

மரக்குகையில் பதுங்கி வாழ்ந்தே

உள்ளிருக்கும் ஆள்விழுங்கும் மலைப் பாம்பும்

உடனிருக்கும் ஓநாய் ஆங்கே; 5

இருந்தாலும் அண்ணன்மார்களோடு செல்

இருந்தாலும் குழந்தைகளே! இளையவனின்

விருப்பத்தை எண்ணி அன்பன்

வருந்தாமல் அழைத்தேகி வாடாமல் நலம்தந்து

கொடுந்துன்பம் வாய்க்கும் காட்டில்

பொருந்தாமல் சோலைகளும் சுடர்பொய்கை

வளங்களையும் போய்முன் காட்டி

வருந்தாம ரைமலர்போல் வரவேண்டும்”

எனத்தாயும் பரிந்து சொன்னார்; 6