கல்வியே இறைவனைக்
காட்டும்
“சீனா நாடு போனாலும் சிறக்கக் கல்வி கற்றிடுக;
தேனார் கல்வி தேடுபவன் தீமை இல்லாத் தூயவனே;
மாணாள் இறைவன் புகழ்பேசும் மாந்தன் அவனே; அறநெறியான்
காணா இறைவன் வணக்கமதும் கல்விதானே அளிக்கு”மென்றார்; 52
கல்வி பகுத்தறிவை அளிக்கிறது
பகுத்துக் காணும் நூலறிவைப் படிப்புத் தானே அளிக்கிறது;
வகுத்த வீடு பேற்றிற்கு வாசல் கதவைத் திறக்கிறது;
புகுந்த பாலை நிலந்தனிலும் பொருந்து நண்பாய் மிளிர்கிறது;
தகுந்த நட்பின் வழிகாட்டித் தாக்கும் துன்பம்
அழிக்கிறது; 53
எழுதுகோல் மையே தூய்மை
வாய்ந்தது
அன்பர் நடுவில் அணிகலனாய்
அரும்பகைவர்முன் கேடயமாய்
இன்பம் அடைய உதவிசெயும் இனிய கல்வி கற்றிடுவோன்
தன்கை எழுதுகோல் மையே தனிச்சீர் வீரன்
குருதியினும்
நன்மை தூய்மை வாய்ந்ததென நவின்றார் பெம்மான்
முகம்மதுவே! 54
கல்வியே பேரின்பம் அளிக்கும்
பெருகும் கல்வி கற்றவனே
பேரின் பத்துள் நுழைகின்றான்;
அருள்வான் இறைவன் அவனுக்கே ஆகும் உயர்வும் சிறப்புகளும்
அரிய கல்வி பெறவைக்கும் அடிஒவ் வொன்றும் தூய்மையதே
உரிய கல்வி பெறுவதெலாம் உறுநல் வினையின் பயன்”
என்றார். 55
இரமுசான் நோன்பு தொடங்கியது
“போர்க்கு முன்னே நோன்புதனைப் பொருந்தச் செய்து போர்க்குப்பின்
ஆர்க்கும் உணவுப் பொருள் தந்தே ஆதரித்தல் கடன்” என்றார்;
நேர்க்கு இரமுசான் நோன்பென்றும் நிகழ்த்தும் “பகுரீத்”விழாவென்றும்
பார்க்கும் இவற்றைத் தொடங்கி வைத்தார்
பரமன் தூதர் முகம்மதுவே; 56
நோன்பு காலத்தில் தவறு செய்தல்
கூடாது
“நோன்பு புரியும் காலத்தில் நோற்போன் செய்யும் தவறுகளால்
வான்போம் அந்த நன்னோன்பு வானை அடைய இயலாது
மாண்புப் பிதுரா ஈகையினால் மறித்த தடைதான் நீங்கிவிடும்
வான்போய் நோன்பும் வளம்செய்தல் வாய்மை” என்றார் முகம்மதுவே’57
***
|