2. ஆயிசா பிராட்டியார்
திருமணப் படலம்
சவீக்குப் போர்
அபாசுபியான் சூள்
உரைத்தான்
“ஐயோ! கெட்டேன் பழிபட்டேன் அபூசகுல்பின் போகாமல்
வெய்யோன் ஆகிப் பிழைசெய்தேன் வெற்றி கொண்ட முகம்மதுவோ
பொய்யோன் அந்தப்பொல்லானைப் போரில்வெல்வேன்; இல்லையெனில்
செய்யோள் என்றன் மனைவிமுகம் சேரேன்”என்றே
சூள்உரைத்தான்; 1
அபாசுபியான் அரற்றினான்
உற்ற துணையாய் வந்தவரை ஒருங்கே கொன்றான் முகம்மதுவே;
குற்றம் செய்தேன் எனைக் காத்துக் கொண்டேன் தவிர என்னவரை
முற்றும் இழந்தேன் இனிவாழ்தல் முறையும் இல்லை எனக்கூவி
அற்றற் றிறங்கும் முகில்போல அரற்றி னானே
அபாசுபியான்; 2
பழிக்குப் பழி
வாங்குவேன்
“பழிக்குப் பழியே வாங்காமல் பாழாய் யானும் வாழ்ந்து விடின்
பழிக்கப் படுவேன்” எனக்கூறிப் பதறிப் பதறிக் கீழ் வீழ்ந்தான்
“அழிக்கப் பிறந்த முகம்மதுவை அழிப்பதொன்றே கடமை”என
இழிக்கப்படும் வெம் மொழிபேசி இழிந்தான்
வஞ்சன் அபாசுபியான்; 3
தீயோன் சொல் கேட்ட மக்கள்
பொங்கினர்
கூச்சல் போட்ட கொடியோனைக் கூடி நின்ற குறைசியர்கள்
மேய்ச்சல் ஒழிந்த மாடுகள்போல் மேவி வன்சொல்
கேட்டார்கள்;
காய்ச்சல்கண்டு பிதற்றுதல்போல் கடுவெஞ்சொல்லன்
தொடர்வெம்மைப்
பேச்சால் மக்கள் மூச்செல்லாம் பின்னும் கனன்று
பொங்கியதே; 4
பொல்லான்பின் பெரும்படை
திரண்டது
“போருக் கெழுவோம்” எனக் கூறிப் பொல்லான் பின்னே எல்லாரும்
சீருக் குரையே செய்கின்ற செம்மல் நபியார் எனும் மரத்தின்
வேருக் கடிவெந் நீர்ஊற்றும் விழைவு கொண்ட மனத்தினராய்
ஊருக் குள்வாழ் வீரர்களை ஒருங்கு திரட்டி எழுந்தனரே! 5
|