| 
       
      அபிறாகுவைக் கொன்றார்
       
      
      அரிய வணிகர் போல் மாறி அப்துல் லாபின் உதைக்குநலார் 
      உரிய வீரர் துணையோடும் உறுகாபிறுக்குள் ஒற்றாடி 
      விரிதீ உளத்துக் கரியவன்தன் வீட்டின் உள்ளே ஒளிந்தேகி 
      ஒருகூர் வாளால் அவனுடலை உயிரும் விரும்பா வகை செய்தார்.	30
       
      
      கால் எலும்பு முறிந்தது
       
      
      துணிந்து கொடியோன் தனைக்கொன்று தோழர்தமையும் உடன்கொண்டு 
      கனிந்த கோமான் முகம்மது வைக்கண்டு சொல்ல வரும்போது 
      திணிந்த உயர்மா மதில்ஏறித் தீமை விட்டு நீங்குகையில் 
      இணைந்த கால்கள் தம்முள்ஒன்(று) எலும்பு முறிந்து
      நொறுங்கியதே	31
       
      
      முகம்மது முன்போய்
      வீழ்ந்தார்
       
      
      தொங்கும் காலின் துன்பநிலை துளியும் அன்னார் உணராமல் 
      எங்கும் உள்ள அல்லாவின் இனிய தூதர் தம்முன்போய்த் 
      “தங்கள் ஆணை நிறைவேற்றித் தப்பி வந்தேன்”
      எனக்கூறி 
      அங்கே வீழ்ந்தார்; அவர்நிலையை அண்ணல்கண்டார்
      அகம்குழைந்தே	32
       
      
      ஒடிந்தகால் நலம் பெற்றது
       
      
      ஒடிந்த காலை ஒளிக்கையால் உரிய முறையில் தொட்டார்கள் 
      இடிந்ந கலைத்தூண் எழுந்ததுபோல் இனியார்தாமும் எழுந்துநின்றார் 
      மடிந்த அபிறா பிகுவோடும் மாற்றார் தீமை நடுங்கிடினும் 
      முடிந்த தென்று சொல்லிடவே முடியா வகையில் ஓங்கியதே!		33
       
      
      தீன்நெறி செழிக்கச்
      செய்த திருமணங்கள்
       
      
      இசுலாம் நெறி வளர்ந்தது
       
      
      புலம்பெ யர்ந்த மூன்றாண்டில் பொன்னார் மதினா நகர்வாழும் 
      குலம் சிறந்த இனத்தார்கள் கொள்கை சிறக்க வழிகாட்டி 
      நலம் பிறக்க வாழ்ந்தவராம் நபிமார் கோமான் இப்புகழ்மண் 
      நிலம் சிறக்க நிழல்அளிக்க நிறைவாய் இசுலாம்
      வளர்த்தார்கள்;		34
       
      
      மங்கை யபுசா அவர்களை
      மணந்தார்
       
      
      நிறையும் பொறையும் குறையாத நெஞ்சில் கறையோ நுழையாத 
      பிறையும் ஒளியால் குறைந்து விடும் பெருமை உடைய நுதல்கொண்ட 
      மறையின் நெறியே ஒழுகிவரும் மயிலார் யபுசா மங்கைதனை 
      முறையாய் மணந்தார் முகம்மதுவே மூத்தோர் எவரும்
      வாழ்த்திடவே;	35
       
   |