பாத்திமாவுக்குப்
புதல்வர் பிறந்தார்
பாவை யர்கள் குலம்போற்றும்
பாத்தி மாவின் திருவயிற்றில்
மாவை யத்தின் நலம்போற்றும் மணிவிளக்காம் ஒருபுதல்வன்
பூவைப் போன்ற மேனியுடன் புவியில் தோற்றம் எடுத்ததனைக்
கோவைக் கனிவாய் நல்லோர்கள் கூற நபியார்
மகிழ்ந்தாரே! 48
அசன் என்னும் பெயர்
சூட்டினார்
எங்கும் நிறைந்த அல்லாவை
இதயம் கனிந்து தொழுதார்கள்
பொங்கும் மகிழ்வால் உடன்சென்று புகன்றார் பாங்கு சேய்செவியில்
தங்கி இருந்து தகுபணிகள் தாமே செய்து சேய்தன்பேர்
மங்கா திருக்க “அசன்” என்றே மகிழ்ந்து திருவாய்
மலர்ந்தார்கள்; 49
சூழ்ந்தோர் மகிழ்ந்தனர்
சுற்றி இருந்த நல்லோர்கள் சுடரோன் வாழ்க வாழ்கெனவே
உற்ற மகிழ்வால் உடன்ஏத்தி ஊரார்க்கெல்லாம் தெரிவித்தார்;
கற்ற மகிழ்வால் கலை நூலின் கருத்தில் ஆழ்ந்து
நெகிழ்பவர்போல்
சுற்றம் நீங்கப் பாத்திமாதம் சுடர்சேய் எண்ணி
நெகிழ்ந்தனரே! 50
தோழர்கள் சூழ இருந்தார்
பள்ளிவாசல் நலம் பெருகப் பண்ணும் நந்தம் நபிபெருமான்
முள்ளில் லாத முளரியைப் போல் முகத்தைக் காட்டி இருந்தார்கள்
கள்ளில் லாமல் மயங்குகிற காதல் உள்ளம் கண்டு அன்பே
துள்ளி மகிழும் உணர்வோடும் தோழர் பலரும் சூழ்ந்திருந்தார். 51
தொண்டர் பசி போக்க விரும்பினார்
காட்சி தன்னைக் கண்டவராம்
கனிவு மிக்க அபூதல்கா
மாட்சி உடைய முகம்மதுவோ மலர்ச்சி இன்றி இருக்கின்றார்
ஆட்சி செய்யும் அரசர்போல் அவர்தாம் இருந்தும் பசிநோய்தான்
நீட்சி உறவே வருந்தாமல் நெருங்கி உணவு தரஎண்ணி; 52
மனையாளிடம் கூறினார்
விரைந்து வீட்டின் உள்போனார்
விழைந்து மனையாள் முன்நின்று
தரையை மலர்த்த வந்தவரைத் தாக்கும் பசிநோய்த் தீத்திறத்தை
உரையால் கூறி உணர்வூட்டி உடனே உண்டி தருக என்றார்;
கறைகா ணாத அன்புடைய காதல் மனையும் உடன் ஆங்கே; 53
|