இருப்பதைக் கொடுங்கள் போதும்
எல்லாம் உணர்ந்த நபியண்ணல்
ஏதும் உணரார் போல் நோக்கி
நல்லார் தமையும் அவர் நலமே நாடும் உம்மு சுலைமினையும்
வெல்லம் தோற்கும் இனிமையுற விளித்தார், “அன்பீர்! உங்களிடம்
உள்ள தெதுவோ அதைக் கொணர்வீர் உவகை அதுவே”எனச்சொன்னார். 60
இது விருந்தா? விளையாட்டா?
இருந்த மூன்றே அப்பத்தை
எதிரில் வைத்து நெய் பெய்தார்
பொருந்தும் தோழர் இருப்பவரோ புகுந்துண் டிடவே எண்பதுபேர்
விருந்தும் இதுவா? என எண்ணி வியர்த்துக் கொட்டி
மேனிஎலாம்
பெருந்துன்பத்தால் நடுக்கமுறப் பேச்சற்
றிருந்நார் மூச்சிலார்போல்; 61
பத்துப் பத்துப் பேராய்
உண்டனர்
பத்துப் பேரை முதல்
அழைத்துப் பசியைப் போக்க உண்கென்றார்
ஒத்து வந்தோர் நெய்தோய்த்தே உண்டார் பசிநோய்
புறங்கண்டார்
நத்தும் பத்துப் பேர்பின்னர் நாடி வந்தே உண்டார்கள்
கொத்துக் கொத்தாய் எடுத்துண்டும் குறையவில்லை
அப்பங்கள்; 62
அப்பங்கள் அப்படியே
இருந்தன
“எட்டுப் பத்துப் பேர் உண்டும் இன்னும் அப்பம் குறையவில்லை
சுட்டுச் சுட்டுப் போடவில்லை சுட்ட பசியும் நமக்கில்லை
தொட்டுத் தொட்டுத் தந்தார்தம் தூய நபிகள் நாயகமே
தட்டில் வைத்த அப்பங்கள் தாம்உள் ளனவே” என்றார்கள். 63
அனைவரும் வியந்து சென்றனர்
பெரியோன் அல்லா
தூதவரின் பேராற்றல்தன் சீராலே
உரியோர் எல்லாம் நன்குண்டோம் ஒளியார் ஆற்றல்
வியக்கின்றோம்
அரியோர் சைதும் உம்மு சுலைமாம் அணங்கார் தாமும் பேறுற்றார்
விரிவாய் உலகம் இவர்புகழை விளம்பும் என்றே
வியந்தார்கள். 64
***
|