3. உகுதுப் போர்ப்
படலம்
அபாசுபியான் வஞ்சகம்
வளர்த்தான்
நஞ்சினும் கொடிய தாக நாவுள அபாசு பீயான்
வெஞ்சினம் கொண்டு தன்னை விழைந்தமக் காவின்
மக்கள்
பஞ்செனும் நெஞ்சம் மேவிப் பக்கத்தில் சூழ்ந்திருக்க
வஞ்சினத் தீச்சொல் வீசி வளர்த்தனன்
பகைமைத் தீயே! 1
மக்கா மக்களே
விழிப்படையுங்கள்
மக்காவில் வாழ்கின் றோரே! மகம்மது தீமை வெல்ல
முக்காலும் முயற்சி செய்தும் முடியாமல் தவிப்புக் கொண்டோம்;
அக்காலம் பதுறுப் போரில் அருமானம் இழந்து போனோம்
இக்காலம் பழியைப் போக்க எல்லாரும் முயல வேண்டும். 2
இவன் புதுப்பிறப்பு
எடுத்தவனோ?
ஈராக்கில் ஈட்டி வந்த இரும்பொருள்
கவர்ந்து கொண்டான்
கூராக்கிக் படைக் கலன்கள் கொண்டுபோர் செய்து
வென்றான்
சீராக்கி வைத்த நந்தம் செழுமரபெல்லாம் தீய்த்தான்
போராக்கித் தழைப்பதற்கே புதுப்பிறப் பெடுத்திட்டானோ? 3
உணர்ச்சித் தீ ஏற்றினான்
பல்லோராய் இருந்தும் கூடப் பயனில்லை வீரம் பேசும்
சொல்லோராய் வாழ்ந்து கெட்டோம் சுரணைஇல் லாமல்போனால்
வல்லோராய்ப் பகைவர் வாழ வளமெல்லாம் இழந்து போவோம்
எல்லோரும் எழுக” என்றே ஏற்றினான் உணர்ச்சித்
தீயே! 4
வாய்மையைத் தூற்றினார்
எந்தையாம் அபூசகுல்மேல்
இயம்புவேன் ஆணை” என்றே
தந்தையை இழந்த மைந்தன் தகாஇகு ரிமா எழுந்தான்;
சிந்தையில் நலமில்லாமல் செப்பிடும் “கலப்பின்” மைந்தன்
வந்தனன் “உபை” என் பான்நல் வாய்மையைத்
தூற்று தற்கே! 5
|