நமக்கு இறைவன் துணை
உண்டு
பகைவர்கள் தொகுத்துஇப் போது படைஎடுத்தனர் வந்துள்ளார்
வகைவகை யான சூழ்ச்சி வலிமைகள் கொண்டும் உள்ளார்
தகைமிகும் தோழர்காள் நீர் தயங்கிடா தெதிர்ப்பீர் விண்ணின்
மிகைவலி நமக்கிங்குண்டு மேன்மைகள் நமையே சேரும்; 12
கண்ட கனவினைச் சொன்னார்
ஆயினும் அடியேன் கண்ட
அருங்கனா ஒன்றும் உண்டு
தாயெனும் பண்பு கொண்ட தனிஆஒன்று என்றன் வீட்டு
வாயிலில் வெட்டப் பட்ட வகைக்கனா கண்டேன்; என்றன்
தூயவர் தோழர் சில்லோர் ஆவியே துறத்தல்
கூடும்; 13
கனவின் உட்பொருள் சொன்னார்
என்றன்கை வீர வாளின் எழில்முனை முறியக் கண்டேன்
என்றன்செங் குருதியோடும் இயைந்துள்ள உறவு மக்கள்
ஒன்றிய போர்க் களத்தில் உயிர்தனை விடவும்
கூடும்;
என்றாலும் இறைவன் காவல் எப்போதும் நமக்கிங்
குண்டு; 14
என் செங்குருதி
வெளிப்படும்
மெய்ப்பையுள் என்றன்
கைகள் மேவியே மறையக் கண்டேன்
பொய்ப்பகை வர்கள் சூழும் போரினில் என்றன் மேனி
தைப்புறும் படைக ளாலே தவிப்புறக் கூடும்; மேலும்
மெய்ப்படர் செந்நீர் தானும் வெளிவரக் கூடும்”
என்றார். 15
நாம் இங்கேயே இருப்போம்
“அன்பர்காள்! நாம் எல்லாரும் அமைதியாய் ஈங்கிருப்போம்;
துன்பமே செய்ய வந்தார் தோன்றினால் துரத்திக் கொல்வோம்
வன்பினை வளர்க்க நாம்ஏன் வாய்ப்பினைத் தேட வேண்டும்?
அன்பினை வளர்க்க வந்தோம் ஆகையால்” என்றார்
அண்ணல். 16
நாம் என்ன கோழைகளா?
அண்ணலார் உரைத்த வற்றை
அன்பினார் மறுத்துப் பேசி
“எண்ணிலாப் பகைவர் நம்மை எதிர்த்திடத் துணிந்த போதில்
கண்ணிலார் போல ஈங்கே கரந்துவாழ்ந் திடலும் நன்றா?
மண்ணுளோர் நம்மைக் கோழை மக்களென் றெண்ணி
டாரா? 17
|