ஜக்காத் கொடையின்
பயன்
பயணம் போகும் நல்லோர்கள் பணம்இல் லாமல் வருந்துவரேல்
அயலார் என்று பாராமல் அவர்க்கும் உதவும் சக்காத்து;
உயர்வான் அல்லா மகிழ்கின்ற உழைப்பிற் கான செலவுகளைச்
செயவும் உதவும் சக்காத்து சிறந்த பயனே விளைத்திடுமே! 96
ஜக்காத் கொடை வான்புகழ்
கொண்டது
முறையாய் வாழத் தான்பட்ட முயற்சி யுடையான் கடன் தனையும்
நிறைவாய்ப் பொதுமை நலன்கருதி நேர்ந்து விட்ட கடன் தனையும்
இறைவன் விதித்த நெறிமுறையில் ஈட்டி வைத்த பொருள்தந்து
விரைவில் அடைக்க உதவுவதும் விண்ணோர் விரும்பும்
சக்காத்து; 97
அயலார் அறியாமல்
கொடுப்பதே “ஜக்காத்” கொடை
இருப்போர் எல்லாம்
இல்லார்க்கே ஈயும் அறமே நல்லறமாம்
விருப்பம் கொண்டு தருவதனை வேறெ வர்க்கும் கூறாமல்
இரக்கம் காட்டும் நல்லுணர்வே இறைவன் விரும்பும் நன்னெறியாம்
பெருக்கும் இன்பம் தருவதுவே பேணும் அரிய சக்காத்து. 98
***
|