பக்கம் எண் :

356துரை-மாலிறையன்

அபாசுபியானிடம் பேசினான்

நன்றி மறந்தான் நயன்மறந்தான் நாணம் மறந்தான் பொய்யரொடும்
ஒன்றி இருந்தான் உளம் இழிந்தான் ஓடி மக்கா நகர் புகுந்து
வென்றி இழந்த அபாசுபியான் வீரர் காலிது இகுரிமாவைச்
சென்றிரந்து முகம்மதுவைச் சிதைக்க உதவி வேண்டி நின்றான்; 6

தீயோர்கள் ஒன்றாயினர்

தூய்மை இலாத பன்றிஎலாம் தோன்றிக் கூடிக் குலவுதல்போல்
வாய்மை இல்லார் குலமெல்லாம் வறிய பொய்யால் குலவினவே
சேய்மை இருந்து சிறியார்கள் செழுந்தாய்த் தமிழை இகழ்வதுபோல்
தாய்மை நல்லார் முகம்மதுவின் தகுதி குறைத்து மொழிந்தாரே! 7

ககுபு மதினா யூதரை மயக்கினான்

மதினா நகரில் வாழ்யூதர் மதிப்பார் போல நடந்தாலும்
மதியார் அண்ணல் முகம்மதுவை; மனத்தில் மாசே கொண்டார்கள்
கொதிப்பார் இசுலாம் நெறிகேட்டால் கூழைக் கும்பிடு இடுவார்கள்
இதனை அறிந்தான் ககுபு அற்பன் எளிதாய் அவரைக் கவர்ந்தானே! 8

அல்லாவையும் வெறுத்துரைப்பான்

இசுலாம் மாந்தர் நேர்வந்தால் இழிவாய்ச் சொற்கள் பேசிடுவான்
கொசுப்போல் அவரை மதித்திடுவான் கொள்கை நெறியைப் பழித்திடுவான்
வசைபாடுவதில் வல்லவனாய் வாய்க்குள் கொழுப்பு மிக்கவனாய்
அசைபோடுகிற விலங்கைப்போல் அல்லாதனையே வெறுத்துரைப்பான்; 9

தீன் நல்லாரை வசை பாடினான்

தீன் நல்லாரைப் பார்த்துவிடின் தீட்டுப் பட்டான் போலாகிக்
கூன்கொள் உள்ளம் கொண்டவரைக் கொடுமை யாகப் பழிகூறித்
தான்போய் நீர்க்குள் குளித்தெழுவான் தகாத்தீண் டாமை மேற்கொள்வான்
வான்போய் இறைவன் முன்நாண வளர்த்தான் மண்மேல் பகைத்தீயே. 10

காதைப் பொத்திக் கொள்ளுவான்

பிழையே அறியா இசுலாத்தின் பெண்கள் தம்மை எள்ளுவதே
தொழிலாய்க் கொண்டான் அவர்முன்னே தோன்றக் கூட அருவருப்பான்
எழில்வான் மறையாம் திருக்குர்ஆன் இயம்பக் கேட்டால் செவிதன்னுள்
பொழிநீர் மாழை கொதிப்பது போல் பொறுமை இழந்து கொதித்தெழுவான்;11