பக்கம் எண் :

358துரை-மாலிறையன்

“ஏற்ற வகையில் செய்க” என்றார்

வல்லார் அன்பு முகம்மதுவும் “வருந்திச் சொன்ன நல்லீர்! நும்
கல்லார் தோளின் வீரத்தைக் காட்டி அன்னான் தனைக்கொல்ல
ஒல்லும் வகையில் எலாம்செய்க உணர்வில்லானை வீழ்த்துவதே
வெல்லும் வகையாம்” எனக்கூறி வீரர்தம்மை அனுப்பி வைத்தார்; 18

முகம்மது பின் சல்மா ககுபுவின் இல்லம் சென்றார்

பொல்லான் ககுபு வாழ்கின்ற பொன்மா ளிகையின் உள்போனார்
கல்லார் நடுவில் கயவன்போல் களித்திருந்த ககுபுவினைச்
சொல்லார் சுடர்மெய்ப் பெயர்கொண்டார் சூழ்ந்துகண்டார்; புலையானும்
“புல்லான் வந்தான் ஏன்?” எனவே புரியாதவனாய் வரவேற்றான். 19

போலியாகப் புகழ்ந்தார்

வெல்லும் வீரச் சல்மாவின் விரும்பு மைந்தர் முகம்மதுவும்
எல்லாக் காசும் குடிகொண்ட இழிந்த ககுபு தனை நோக்கி,
செல்லாக் காசுக் குவை நடுவில் செம்பொற் காசு போன்றவரே!
தொல்லோர் மரபைப் பிறழாமல் தூய்மை யாகக் காப்பவரே! 20

முகம்மதுவை வீணில் நம்பினேன்

உய்யும் வழியே அறியாமல் ஊர்க்குள் வாழ்ந்து திரிகின்றேன்
ஐய! என்றன் உணர்ச்சியினை ஆர்க்கும் உரைக்க வழியில்லை
பொய்யாய் அவர்முன் வாழ்கின்றேன் புகழை இழந்து தாழ்கின்றேன்
வெய்ய மனத்தான் முகம்மதுவாம் வீணில் அவனை நம்பினனே! 21

எல்லாம் வல்லவன் அல்லா என்கிறான்

அவனே இறைவன் தூதனென ஆர்க்கும் அஞ்சாது உரைக்கின்றான்
எவனோ அல்லா ஓரிறைவன் இருக்கின் றானாம் அவனன்றி
இவண்ஓர் அணுவும் அசையாதாம் என்னைப்போன்று பல்லோரும்
அவன்தன் பேச்சால் மயக்கமுற்றே அல்லா அல்லா” என்கின்றார். 22

என்பேர் முகம்மது என்பதாகும்

பரம்ப ரையாக நாம் வணங்கிப் பணியும் தெய்வம் தனைத்தூற்றும்
வரம்பில் லாத பொய்யுரையை வாய்மை என்றே நம்பி விட்டேன்
நிரம்பா அறிவால் தீமையினை நேர்மை யாகும் என எண்ணி
மரம்போல் வாழ்ந்து வருகின்றேன் முகம்மதுவேஎன் பேராகும்; 23