|
கொல்லக் கத்தி ஏந்தினர்
எந்தை யினையே கொலைசெய்த
இழிந்த குபையே உனைஇன்றே
முந்திக் கொன்று முடித்தால்தான் முழுதும் அமைதி கொண்டிடுவோம்
தந்திரங்கள் செய்தினியும் தப்ப முடியா தெனக் கூறிச்
சிந்தும் குருதிக் கறைக்கத்தி செங்கை ஏந்தி
ஓங்கிடுமுன்; 54
தொழுகை செய்ய உடன்பட்டனர்
“கொல்லத் தானே போகின்றீர் கொஞ்ச நேரம் பொறுத்திடுங்கள்
வல்ல இறைவன் புகழ் கூறி வாழ்த்தி வருவேன் அதன்பின்னர்ச்
சொல்ல ஒன்றும் எனக்கில்லை சூழ்ச்சி ஏதும் இதில்இல்லை
எல்லாம் உண்மை” எனச் சொன்னார்; இழிந்தோர் கூடச் “சரி”
என்றார். 55
அல்லாவே காப்பவன்
என்று தொழுதார்
உரிமை பெற்று வணங்கியவர்
உயிரைப் பற்றி வருந்தாமல்
இரண்டு முறையே தொழுதார்கள் எழிற்பே ரின்பம்
பெற்றார்கள்
விரியும் உலகம் தனைஎல்லாம் விளக்கும் ஒளியாம் அல்லாவே
பரிந்து காக்கும் அருள் உடையான் பாரில் என்றும்
நிலைஉடையான். 56
தொடங்குக என்று கழுத்தைக்
காட்டினார்
எல்லாம் வல்ல அல்லாவாம்
இறைவன் தனக்கே உயிர் உரிமை
கொல்ல இருக்கும் உங்களையான் குறைகள் சொல்லி வருந்துகிலேன்
வல்லான் இறைவன் எனைமுழுதும் வாழ்த்தியன்றோ அழைத்திடுவான்
சொல்ல எதுவும் வேறில்லை தொடங்கு கென்றார் குபைபு
நலார்; 57
நல்லோர் ஆவி பிரிந்தது
இறைவன் அருளின் புகழ்பேசி இனிதாய்க்குபைபு முன்நின்றார்
கறைவாய்ப் பட்ட நெஞ்சுடையார் கடவுள் விரும்பும் நல்லாரை
முறைவாய் நில்லாத் தீயமன முடிவால் ஆவி வாங்கினரால்
மறைவாய் வானோர் இருந்துஆவி மகிழ்வாய் ஏந்திச்
சென்றிடவே! 58
அபாசுபியான் பேசினான்
வலியார் சயதை விலைபேசி வாங்கிச் சபுவான் பின்உமையா
நலியக் கொல்ல முற்பட்டான் நாடிக் காண வந்தோருள்
பொலியாத் தீயோன், அபாசுபியான் பொருந்தி வந்து, “சயதுவே! நீர்
ஒளியா துரைப்பீர் உமைவிடுத்தே உங்கள் நபியார் தமைக் கொன்றால் 59
|