|
முகம்மதுவின் காலில்
தைத்தமுள்
என்நெஞ்சுள் தைக்கும்
என்றான் கொடியன் சொல் கேட்டே “இழிவாய்ச் சொன்னீர் முறையற்றீர்”
இன்றென் வீட்டில் நலமாக இருந்தேன் எனினும் அவ்வேளை
ஒன்றே முள்தான் என்றாலும் உயர்ந்தோர் காலில்
குத்துமெனில்
ஒன்றேன் என்னும் உண்மையினை உணர்வான் இறைவன்
குறைமதியோய்;60
ஆ! ஆ! இதுவன்றோ அன்பு?
என்று சொன்ன சயது அன்பை இழிந்தோன் கூடத் தான் கேட்டு
நன்று நன்று மிக நன்று நல்லோர் தோழர் தம்மன்பை
நின்று சாகும் வேளையிலும் நிறைவாய்க் கொண்டார் எனவியந்து
மன்றம் வியக்க மாமறையோர் மகம்மது அருமை
உரைசெய்தான். 61
அபாசுபியான் நாணினான்
உற்ற தந்தை தாயினையும் உறவு மக்கள் மனையினையும்
மற்றத் தோழர் எவர்தமையும் மறந்து விட்டு முகம்மதுவைக்
குற்ற மற்ற மனத்தன்பால் கூடி னாரே இத்தோழர்
நற்ற வத்தார் என எண்ணி நாணி னானே அபாசுபியான்; 62
நபியார் ஆமீரின்
மனமாசை அகற்றினார்
புலம் பெயர்ந்து நான்காண்டு போர்போர் என்று கடந்ததன்பின்
நலம்பேண் அபூபரா ஆமிர் நபியார் கோனை நேர்கண்டார்
நிலம்போற் றிடும் வான்தூதினரும் நிலைத்த நெறியின் புகழ்கூறி
அலம்பி வைத்தார் அகமாசே ஆமிர்அன்பால் உருகிப்போய்; 63
இதில் வஞ்சகம் இருக்குமோ?
நல்லீர்! நசுது நாட்டிற்கு நவிலும் தூய மறையோரைச்
செல்வீர்! எனவே அனுப்பிவிடின் சென்றாங் கவரும் நலம்செய்வார்
வல்லீர் செய்க” எனக்கேட்டார்; வாய்மை யாளர் அதுகேட்டுப்
பல்லோர் தம்மை அனுப்பிவிடின் பகையார் எதிர்த்துக் கொல்வாரோ? 64
எழுபது நல்லோரை அனுப்பி
வைத்தார்
இவ்வா றச்சம் கொண்டவராய் இருக்க அதைமுன் கண்டோரும்
செவ்வாய் ஓதும் நெறியாரைச் சிறப்பாய்க் காத்துத் தந்திடுவேன்
இவ்வாய்மையும் மாறாதே என்று கூற நம் வள்ளல்
அவ்வாறெழுபது அரியவரை அனுப்பி வைத்தார் அவரோடே; 65
|