கொடிய பாலை நிலத்தைக்
கடந்தனர்
வெயிலும் மணலும் கலந்தது தான் வியன்பே ருலகோ எனஎண்ணும்
இயல்பில் வேறு கருவில்லா இடமாம் பாலை கடந்தேபின்
அயலோர் இல்லாச் சிறுசோலை ஆங்கே இருக்கக்
குறுநிழலில்
முயலோர் பக்கம் ஒடுங்குதல்போல் முன்வந்தார்கள்
படுத்தனரே! 12
அரபி ஒருவன் முகம்மதுவைக் கொல்ல
வந்தான்
கொடிய அரபிக் காபிர்கள் குலத்தைச் சேர்ந்தோன் ஆங்கொருவன்
நெடியோர் தம்மைத் துரத்திப்போய் நீக்கி விடுவேன் ஆவிஎன
அடித்துச் சொல்லிப் புறப்பட்டான் அவனும் நினைத்த அவ்வண்ணம்
படுத்திருந்த நிழல்நபியார் பாதம் தனையே நேர்கண்டான்; 13
முகம்மது கண் விழித்தார்
கயவன் ஆங்கே கண்ணுறங்கும்
கவின்மா முகத்து முகம்மதுவின்
அயல்முன் நின்று நஞ்சுடைய அரவம் போலக் கரவுடனே
செயமுற் பட்டு நபியார்தம் செவ்வாள் தன்னைக் கையேந்தி
முயலும் அந்த நொடிப்போதில் முகம்மதுவும்கண்
விழித்தாரே! 14
முகம்மதுவே உம்மைக் காப்பார்
எவர்?
மாட்டிக் கொண்டாய் முகம்மதுவே மாளத் தானே போகின்றாய்
காட்டிக் கொண்டாய் நீ இறைவன் கருத்தால் வந்த தூதனென
ஆட்டிப் படைத்தாய் எம்மவரை; ஆவி விடவே போகின்றாய்
நீட்டி வெட்டப் போகின்றேன் நினையார் காப்பார்?
எனக் கேட்டான். 15
“அல்லாவே காப்பான்”
என்றார்
அதனைக் கேட்ட பெருமானார் அமைதி யாக, “என் கூர்வாள்
இதுவுன் கையில் இருந்திடவும் என்னைக் காக்கும் இயல்புடைய
இதயத் தோழர் எல்லாரும் இருகண் மூடி உறங்கிடவும்
புதுமை செய்து காத்தற்குப் புகழோன் இறைவன் அல்லாவே! 16
வாளை இழந்தான் அவ்வீரன்
“ஒருவன் உள்ளான் எனைக்காக்க உலகில்” என்று கூறியதும்,
“ஒருவன் அல்லா” எனும் பேரை ஒளியார் கூறக் கேட்டவுடன்
சிறுவன் போல நின்ற அவன் செங்கை நடுங்கி விதிர்விதிர்க்கப்
பெருவாள் தானும் கீழ் வீழ்ந்து பேச்சற்
றிருந்தான் தீச்செயலோன்; 17
|