பழங்களைப் பறித்துக் குவியுங்கள்
என்றார்
இரக்கம் நெஞ்சுள் இலையானால் எவரும் இதுபோல் தானிருப்பார்
புரக்க வேண்டும் உதவிதனைப் புரிய வேண்டும் எனஎண்ணி
கரத்தல் இலாத சாபிர்தம் கனிந்த ஈந்தின் மரம்காட்டி
நிரக்க அந்தப் பழத்தைஎலாம் நேரில் குவித்து வைக்க”
என்றார்; 52
அளந்து எடுத்துக்
கொள்ளுங்கள்
அண்ணல் உரைத்த ஆணைவழி
அன்புச் சாபிர் பழத்தைஎலாம்
வண்ண மாகப் பறித்தீட்டி வகையாய்க் குவித்து நேர்வைத்தார்
கண்ணால் யூதர்களை நோக்கிக் கையால் அளந்து கொள்ளுங்கள்
பின்னால் மீதி இருப்பதனைப் பெரியோர் அடைவார்
எனச்சொன்னார். 53
கடன் தீர்ந்தது பழம்
குறையவில்லை
வட்டியோடு முதல் பெற்றோம்
வகையாய் என்று மகிழ்ந்தவர்கள்
கொட்டியுள்ள பழக்குவையைக் கொள்ளை அடிப்பார் போல்வந்து
கட்டிக் கட்டி அளந்தார்கள் கண்முன் நூற்றைம்பதுகலங்கள்
எட்டி எட்டிக் கொட்டியவை எல்லாம் வாரிப் போனார்கள்; 54
அரியோரைப் புகழ்ந்தனர்
கடனை எல்லாம் அடைத்த பினும் கனியோ அளவில் குறையவிலை
கடமை புரிந்த உடன் மீதிக் கனிகள் காட்டிக் காபிரிடம்
அடர்தீங் கனிகள் இவற்றையெலாம் அடைவீர் என்றார் முகம்மதுகோன்;
தொடர்ந்திருந்த பல்லோரும் தூயோர் பெருமை
புகழ்ந்திடவே. 55
***
|