பக்கம் எண் :

38துரை-மாலிறையன்

சிறுவர்கள் அலிமாவிடம் சென்று கூறினார்

அஞ்சியவர் சிறுவரெலாம் அவரவர்தம்

அன்புடையோர் அகத்தில் சென்றே

வஞ்சனையார் இரண்டொளியார் வருகையினால்

வளர்த்தசெயல் வருந்திக் கூறப்

பஞ்சுமன அலிமாவோ பகர்ந்ததனைக்

கேட்டவுடன் பதறி வீழ்ந்து

நஞ்சுதனை அருந்தியவர் போல்நடுங்கி

நடுத்தெருவில் ஓடினாரே. 22

அலிமா ஓடிவந்து புதல்வரைக் கண்டார்

புண்ணியநல் மரத்தின்கீழ்ப் பொருந்தியவர்

அன்புமனப் புதல்வ ரானோர்

தண்ணியநீர் குளித்தெழுந்த தன்மையினில்

தாமாங்கே தனித்திருக்கக்

கண்ணீரும் கம்பலையும் கொண்டலிமா

கவின்தாயார் கலங்கிவந்து

மண்ணிலுறும் இறைதூதர் மாமணியை

நேர்கண்டு மகிழ்ச்சி கொண்டே; 23

முகம்மதுவே! கனி யமிழ்தே!

புதுமலரே! புண்ணியம்செய் தருள்வழங்கப்

புகுந்தவரே! பொலிந்த வாழ்வின்

முதலவரே! முழுப்புகழின் தண்ணொளியே!

முகம்மதுவே! முத்தே! அன்புக்

கதவதனைத் திறக்கவந்த கனியமிழ்தே!

காதல்மனம் கசிந்து காண

இதயமுற வெளித்தோன்றும் நறுமணமே!

எனப் போற்றி ஏத்தி னாரே! 24