பழிச்சொல் படர்ந்தது
ஒட்டார் கூறும் பழிஎல்லாம்
ஒவ்வாப் பொறாமைப் பண்பாலே
கெட்டார் கெட்டார் எனக்கூறிக் கெடுப்ப தன்னார்
இயல்பாலே
சுட்டார் நாவால் சிலதீயர் சுடர்ப் பொன் ஒளியைக் கரி என்றார்
விட்டார் என்பார் ஒருவரிலை விழியே பெற்றார்
அறிவற்றார்; 29
முசுலிம் மக்களே குறை
கூறினர்
அயலார் சொன்னார் அதுபற்றி அன்னை யார்க்குக் கவலையில்லை
செயல்ஆர் வத்தார் தீன்நல்லார் சிறந்த பேரும் உடன்சொன்னார்
இயல்பாய் மிச்தா பின் உதாதா இரக்கமில்லாக் கவி அச்சான்
துயரம் பெருக்(கு) அமுனாபிந்தும் தூய்மை இழந்து பேசினரே! 30
முகம்மதுவும் உள்ளம்
வருந்தினார்
காணார் கண்ட படிபேசும் கருத்தில் உண்மை இலாப்போதும்
மானார் தூய்மை அறியாமல் மாற்றார் கூற்றை நம்பியவர்
வீணார் வத்து மொழி பேசி விண்ணைப் பழித்தார் போலானார்
மாணா மக்கள் இன்னவரால் மகம்மதுள்ளம் வருந்தினரே! 31
பழிக்கு அஞ்சினார்
ஆயிசா
அண்ண லாரின் நிலைஎண்ணி அபூபக்கர்தம் கனல்மங்கை
உண்ணல் உறங்கல் இழந்தவராய் ஒளியும் மெய்யில் குறைந்தவராய்
எண்ணல் ஏங்கல் இறையன்பை ஏந்தல் என்னும் நிலையினராய்
இன்னல் ஒன்றே தான் சுமந்தே இயங்கல் பாவை ஆயினரே! 32
என் தந்தையிடம்
போகின்றேன்
குற்ற மற்றேன் ஊர்மக்கள்
கூற்றில் நனைந்தேன் உறவோடும்
சுற்றம் எல்லாம் சொல்லுவதால் தூய மனமும் திரிந்துவிடும்
நற்ற வத்து நாயகமே! நான்என் தந்தை இடம்செல்வேன்
வற்றி விட்ட என் கண்கள் வாய்மை உரைத்தும்
பயனில்லை; 33
இறைவனிடம் மன்னிப்புக் கேள்
இவ்வாறியம்பித் தூயவரும் இனிய தந்தை இடம் சென்றார்
அவ்வா றாங்கே ஒருதிங்கள் ஆனபின்னர்ப் பெருமான் போய்ச்
“செவ்வாய்க்கிளியே! ஆயிசாவே! செப்பித் தாழ்ந்தால் இறையவன்நம்
ஒவ்வாத் தவற்றை மன்னிப்பான் உணர்வாய்” என்றார் அது
கேட்ட; 34
|